பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

301


இறைவனுக்கு ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. ஞானத்தின் வடிவாக இருக்கிறான் என்று சொல்வார்கள். ஞானம் என்பது அறிவு என்பதனுடைய மறு பொருள்தான். அறிவியல் உலகியலில் ஒட்டியிருக்கும் பொழுது அறிவு என்று சொல்லலாம். அது அருளியலைச் சேர்ந்து பழுத்து முறையாக வளர்கின்றபொழுது ஞானம் என்று சொல்கிறோம். அறிவினாலே ஓரோர் சமயம் அல்லல் வர முடியும்; அறிவு சில சமயங்களிலே மறக்கத் துாண்டும். அறிவு சில சமயங்களிலே அகங்காரத்தைத் தூண்டும். ஆனால், அருளியல் சார்ந்த ஞானம் இருக்கிறதே அது அடக்கத்தைத் தரும், பண்பைத் தரும்; அன்பைத் தரும், ஆக்கத்தைத் தரும். இதனாலேயே இந்த அறிவுக்கும் அந்த அறிவுக்கும் வேற்றுமைப்படுத்த வேண்டுமென்பதற்காக இங்கே அறிவு என்று சொன்னார்கள்; அங்கே ஞானம் என்று சொன்னார்கள். அந்த உயர்ந்த ஞானத்தின் வடிவமாக இருக்கின்ற இறைவன்னப் பார்க்கின்ற பொழுது அனுபவத்துக்குக் கொண்டு வருகிற சாதகமாகப் பார்க்கிறோம். இன்னும் தெளிவாகத் தமிழ்நாட்டினோடு சமய நெறியை வைத்துப் பார்த்தால் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தினுடைய இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. சிலர் விஞ்ஞானத்தைப் பழித்து அது வளர்வதனாலேயே ஏதோ ஒரு பெரிய கேடு நாட்டுக்கு வந்துவிட்டதாகச் சொல்வார்கள். அந்த முறை தப்பு. மெய்ஞ்ஞானத்தினுடைய வளர்ச்சிக்கு அறிவியல் அல்லது விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபொழுது இறைவன் இந்த உயிர்களுடைய அனுபவத்துக்காக நிறைந்த அனுபவப் பொருள்களை நிறைந்த உணர்வு உடைமைகளை எல்லாம் உலகத்திலே நிறையக் கொடுத்து வைத்திருக்கிறான். அப்படிக் கொடுத்து வைத்ததையெல்லாம், அறிவுக்கூடமாக இருந்தமையால் நாம் பூரணமாக அனுபவிக்க முடியவில்லை. இப்பொழுது