பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவனுடைய படைப்பிலே இருக்கின்ற அதிசயங்களை அற்புதங்களை, ரகசியங்களையெல்லாம் நாமே அறிந்து, உணர்ந்து அனுபவிக்கிற சக்திகளெல்லாம் வருவது இருக்கிறதே அது நம்முடைய தலைவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. ஆம், இறைவன் நமக்காகவே செய்ததால் இந்த அதிசயங்களை-அற்புதங்களையெல்லாம் நீண்ட நாட்கள் கண்ணிருந்தும் குருடராக, காதிருந்தும் செவிடாாக அனுபவிக்காத நிலைமையிலிருந்து மாறி நாம் அதற்கு நம்மை முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டு, நாம் அவற்றை அனுபவிப்பதனாலே மெய்ஞ்ஞானம் வளாகிறதே தவிர அங்கே ஒரு கேடு வருவது போலில்லை. எனவே விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்று பார்க்கிறபொழுது எனக்கு விஞ்ஞானத்தினுடைய படிகளிலே விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியிலே, விஞ்ஞானத்தினுடைய நிழலிலே உண்மையான அருளியல் வளர்கிறது-அப்பொழுது அருளியல்கூட முழுத்தன்மை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தெளிவாகச் சொல்லப்போனால் விஞ்ஞானத்தினுடைய தளர்ச்சியிலே கொஞ்சம் அருளியல் தடுமாற்றம் அடைவது போலத் தோன்றும். ஆனால் அது எப்பொழுது என்று சொல்ல வேண்டும். நம்பிக்கையின் மீது மாத்திரம் கட்டப்பட்ட சமயம் அல்லது சில சடங்குகள், சில முறைகள் இவற்றாலே மாத்திரம் உயிர்விட்டுக் கொண்டிருக்கிற சமயமாய் இருக்குமானால்-அறிவோடும் அனுபவத்தோடும் ஒத்துவராத சமயமாய் இருக்குமானால் அது வாழாது; செத்துக் கூடப்போய்விடும் என்று தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் சமயம் என்பதை எது என்று கருதுகிறீர்கள் என்பதை நோக்க வேண்டும். சமயம் என்றால் ஒரு பரிபூரண வாழ்வு என்று பெயர். மனிதனுடைய உள்ளத்தைத் தொட்டு அவனைப் பக்குவப்படுத்தி அவனைச் செழுமையுடைய மனிதனாக்கி அவனை அன்பு மனிதனாக-அறமனிதனாக-மனிதரில் தேவனாக ஆக்குகின்ற