பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

307


தலைப்படுகிறார்கள். இரண்டு பேருக்கும் அனுபவம் இருந்தது. அதைப் பறித்துத் தனக்குரிமையாக்கிக் கொள்வதன் மூலம் அறிவியல் மேதைகளுக்கு அனுபவம் இருக்கிறது. பார்க்காமலேயே அந்தப் பூவினுடைய தன்மையை பூவினுடைய மாட்சியை, பூவினுடைய அடக்கத்தை பூவினுடைய ஆட்சியை, பூவினுடைய எல்லாவிதமான எடுப்புக்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்கின்ற மாட்சிமை தாயுமானவர்க்கிருந்தது. தனக்குப் பறித்து உரிமையாக்கிக் கொள்கின்றவர்கள் அறிவியலாராக இருக்கிறார்கள். தனக்குரிமையாக்கிக் கொண்டு அறிவியலை அனுபவிக்கின்றவர்கள் அறிவின் மேதைகளாக இருக்கிறார்கள். தாயுமானவர் போன்றவர்கள் தமக்கு அதை உரிமையாக்கிக் கொள்ளாமலேயே அதைத் தாம் உணர்வதின் மூலமாக அந்தப் பொருளைப் பார்த்துச் சிந்தித்து உணர்வதின் மூலமாக தமக்கு உரிமையாக ஆக்கிக் கொள்வதற்கு மெய்ஞ்ஞானம் அல்லது அருளியல் என்று பெயர்.

...செடியிலே மலர் இருந்தபடியே, அதைப் பார்த்தபடியே பார்த்து இருந்தபடியே இருந்து, சொன்னபடி சொல்லி என்று சொல்லுவார்கள். அதுபோலச் செடிகளில் மலர் இருந்தபொழுதே இருந்தபடியே பார்த்து அந்த மலரை-மலரின் மாட்சிமையைத் தனக்குரிமையாக்கிக் கொண்ட பெருமை தாயுமானவர்க்கிருந்தது. அறிவியல் மேதைகளுக்கு அப்படி இருக்க முடியாது. அதைப் பறித்துத் தன்னுடைய வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து உரிமையாக்கிக் கொள்வார்கள். இவர்கள் அனுபவிப்பார்கள்: அவர்கள் உணர்வார்கள். இவர்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவார்கள். இந்த இணைப்புகளை வைத்துப் பார்க்கின்றபொழுதும் நமக்குச் சமயஅறிவு, விஞ்ஞான அறிவு இரண்டும் முரண்பாடாக இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் தெளிவாக, சில பேரறிஞர்கள்