பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

309


கிட்டத்தட்ட ஒரே பாதையிலே போகிறவர்கள்தான். இவர்களும் கூட அனுபவிக்கிறார்கள்; அறிகிறார்கள்; ஆராய்கிறார்கள். அவர்களும் பொருளை ஆராய்கிறார்கள்; அறிகிறார்கள். ஆனால், இரண்டு பேருக்கும் ஒரே ஒரு வேற்றுமை. அங்கே தன்னமைப்பு ஆக வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த எண்ணங்களையெல்லாம் மையமாக வைத்துப் பார்க்கின்ற பொழுது கடவுள் நம்பிக்கையினாலே விஞ்ஞான வளர்ச்சி கெடுவதில்லை என்றும் விஞ்ஞான வளர்ச்சி கடவுள் நம்பிக்கைக்கு அரண் செய்கிறது என்றும் சொல்கிறார்கள். நல்ல உயர்ந்த விஞ்ஞானம், உயர்ந்த அறிவியல் சமய உணர்ச்சிக்கு அரண் செய்து கொண்டே போகிறது. சமய உணர்ச்சிக்கு அரண் செய்வதன் மூலம்தான் விஞ்ஞானத்துக்குப் பெருமையும், மாட்சிமையும், இருக்கிறது - விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியைக்கூடப் பாராட்ட முடிகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இன்னும் அதிகமான சமய நம்பிக்கையும், சமய வழிபாடும், சமய உணர்வும், பெருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. சமய, விஞ்ஞான வளர்ச்சி வளர வளர அதனுடைய உலகியல் தேவைகள் நிறைவு செய்யப்படும். இப்பொழுது உலகியல் தேவைகளுக்கே போராடிக் கொண்டிருந்த காலத்திலே, வாழ்கிறோம்.

நம்முடைய வாழ்க்கைத் தேவைகளான சோற்றுக்கும் துணிக்கும் போராடிக் கொண்டிருக்கிற கேவலமான காலத்திலே-அவைகளை இன்னும் நிறைவு செய்ய முடியாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல விஞ்ஞானக் கலை வளருமானால், அதன் மூலமாக உலகியல் தேவைகள் நிறைவு செய்யப் பெற்று விடும்.

உலகில் தேவைகளை நிறைவு செய்த பிறகு அதனுடைய முயற்சிக்கு, அதனுடைய போராட்டத்துக்கு, அதனுடைய ஆக்க ரீதியான எண்ணங்களுக்கு, சிந்தனை