பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனை, வேறு பற்றுக்கோடே இருக்க முடியாது. அந்த உயர்வு கடவுளிடத்திலே அவர்கள் எண்ணுகின்ற எண்ணம் போக்கெல்லாம் வரும்.

இன்றைக்கு இந்தக் தொடக்கக்காலத்திலே அறிவியலும் வளர்கிறது. அருளியலும் வளர்கின்றது. இரண்டுக்கு மிடையே கொஞ்சம் மோதுதல் இருப்பதற்குக் காரணம், நம்முடைய தேவைகள் போதவில்லை. நம்முடைய தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்வில்லை. அங்கே செல்ல வேண்டும்-இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையிலே உந்து வண்டியாகப் பறந்து கொண்டிருப்பதனாலேதான் நமக்கு இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலக் கட்டத்திலே இந்த அறிவியல் முறையாக-ஒழுங்காக வளர்க்கப்படுமானால்-ஆதிபத்திய உணர்ச்சிகளுக்கு உரிமையாக்கப்படாமல் வளர்க்கப் பெறுமானால் நிச்சயமாக ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக இந்த உலகத்தின் தேவைகள் நிறைவு செய்யப்பெறும்.

அப்பொழுது சோற்றுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். துணிகளுக்காக முயற்சிப்பது என்கிற வார்த்தையே இல்லாமற் போய்விடும். சோறு துணிக்காக மக்கள் முயல்கிறார்கள் என்கிற காலக்கட்டம் போய், அது எல்லாம் நிறைவேறிய பிறகு அவன் சோம்பேறியாக இருக்க முடியாது. ‘பொறிகளுக்குத் தேவையானவை கிடைத்த பிறகு புலன்களை நோக்கி மனிதன் பாய்கிறான்’ என்பது ஞானிகளின் அனுபவ சித்தாந்தம். அவனுடைய கைகள், கால்கள் அவனுடைய தேவைகள் நிறைவு செய்யப் பெற்ற பிறகு வேறு திசையிலே பொறிகளும், புலன்களும் திரும்பப் பெறுகின்றன. எப்படி எப்படி ஆற்றுவெள்ளம் தேவைப்பட்ட அளவிற்குத் தேக்கிய பிறகு வேறு திசையிலே திருப்பப் பெறுகிறதோ அதுபோல, மனிதனுடைய உயிரியல் அநுபவம் இருக்கிறதே அது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு-குறிப்பிட்ட எல்லைக்