பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

313


எனவே மனிதனுக்குச் சோர்வும் வருகிறது, தளர்ச்சியும் வருகிறது. மனிதன் ஒரு நாள் உறங்குகிறான். ஒருநாள் ஓடுகிறான். அவனிடத்திலே ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை இடையாது. ஆனால், உலகத்தின் அமைப்பிலே- உலகத்தின் நிகழ்ச்சிகளிலே-வியத்தகு தோற்றங்களிலே ஓர் ஒழுங்கு இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. எனவே யார் இவற்றையெல்லாம் கண்காணித்துப் பார்ப்பது என்று கேட்கிறான். அவன் அந்த ஒழுங்கு முறை பிறழாத நிகழ்ச்சிக்கு நல்ல ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி (Order and consistency) என்று சொல்கிறான். ஓர் ஒழுங்கு இருக்கிறது; ஒருமுறை பிறழாத நிகழ்ச்சி இருக்கிறது. நம்முடைய காலிலே-கைகளிலே-கொடுக்கப்படுகின்ற காரியங்களிலே பல ஒழுங்கு தவறிப்போகும். நம் கைகளால் நாம் செய்கின்ற நம்முடைய அறிவு பொறி புலன்களாலே செய்கின்ற காரியங்களிலே-உயர்ந்த கடவுள் நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களிடத்திலே செய்யப்படுகின்ற காரியங்களிலே கூட பல சமயங்களில் ஒழுங்கு தவறுகின்ற-முறை பிறழ்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், உலகத்தின் அமைப்பிலே நடைமுறைகளிலே ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. அது ஒரு ஒழுங்கும் ஒரு முறை பிறழாத நிகழ்ச்சியுமாக இருந்து கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் முறைப்படி இயக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்திக்கு என்ன பெயர் என்று சொல்ல எனக்குத் தெரியவில்லை. என்னுடைய அறிவு அந்த அளவுக்கு வளரவில்லை என்று கையை விரிக்கிறான். அந்த மாதிரி நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். அவனுடைய படைப்பிலே உயிருள்ள பொருள்களுமிருக்கின்றன. ஆனால் மனிதனுடைய படைப்பிலே உயிரற்ற பொருள்கள் இருக்கின்றன வென்று “நூலன்” என்ற பேராசிரியன் சொல்கிறான். இப்படி நூற்றுக்கணக்கான சான்றுகளை-மேற்கோள்களைக் குவிக்க