பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




6


தமிழும் சமயமும் சமுதாயமும்

(மலேசியச் சொற்பொழிவுகள்)


1. சமயமும் வழிபாடும்


போற்றுதலுக்கும் பாராட்டதலுக்கு முரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! நாம் அனைவரும் கூடிக் கலந்து பேசவும், பேசி மகிழவும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.

நாம் நன்கு நீராடின பிறகு கூடினால்கூட நாம் இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதை உணருகிறோம். இந்த அரங்கத்தில் வெப்பம் இருப்பதைப் போலவே உலக அரங்கத்திலும் வெப்பம் இருப்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் எங்கு பார்த்தாலும் பதற்ற நிலை. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கொன்று குவிக்கின்ற காட்சிகள்; இவைகளையெல்லாம், ஆன்மீகத் துறையில், சமயத்துறையில் நம்பிக்கை உடையவர்கள், கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்து இதற்கு என்ன காரணம் என்று