பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

329


புலனைச் செவியோடு சேர்த்து என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் என்று ஊக்கம் இல்லாது போனால், அவர்கள் பேசுவது எனக்குத் தொல்லையாகவும் இருக்காது; கேட்கவும் முடியாது. ஆனால், இன்றைக்கு நாம் அப்படி இல்லை. மற்றவர்கள் பேசுகின்ற துரத்திற்கு அதிகம் விலகி இருந்தால் கூட, என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் அக்கறை கூட வந்திருக்கிறது. பாரதிதாசன் மிக அருமையாகச் சொன்னான். ‘இந்த மயிலுக்குக் கழுத்தை நீட்டி வைத்திருப்பதைப்போல, மனிதர்களுக்குக் கழுத்தை அதிகம் நீட்டி வைக்கவில்லை. அதிலும், குறிப்பாகத் தமிழகப் பெண்களுக்குக் கழுத்து நீளமாகவே இல்லை; குறுகலாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஏன்’ என்று கேட்டுவிட்டுப் பதில் சொல்லுகின்றான். ‘ஏற்கனவே அடுத்த வீட்டில் என்ன நிகழ்கிறது என்பதுதான், இவர்களுக்கு உள்ள கவலை. இதில் கழுத்து வேறு நீளமாக வைத்து விட்டால், இங்கு இருந்தபடியே அடுத்து வீட்டுக்குள் தலையை விட்டுவிடுவார்கள்; பார்ப்பதற்கு” என்று சொன்னான். ஆக நமக்கு, நாம் யார் என்பதில் அக்கறை இல்லை. மாணிக்கவாசகர் போன்றவர்கள், நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று ஆய்வு செய்தார்கள். அவர்கள் நான் யார்? என்று கேட்க ஆசைப்பட்டார்கள். இப்பொழுது இவன் நான் யார்?’ என்று கேட்டுக் கொள்ள ஆசைப்படாமல் நீ யார்? நீ யார்?’ என்று கேட்டுக்கொண்டி ருக்கிறான். சமயத்தில் நான் யார்? என்று கேட்டால் உடனே அச்சடித்த அட்டை கொடுக்கிறார்கள். அதிலே முகவரி இருக்கிறது. ஆனால் அது அஞ்சலக முகவரியே தவிர, அந்த ஆளினுடைய சொந்த முகவரி அல்ல. அப்படியென்றால் என்னவென்று உங்களுக்குப் புரிந்துஇருக்கும் என்று நினைக்கிறேன். கொடுத்த அட்டையில் இருக்கிறதே, அது அஞ்சலக முகவரியே தவிர சொந்த முகவரி இல்லை. அஞ்சலக முகவரி வேறு; சொந்த முகவரி வேறு. அஞ்சலக