பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குழந்தைகள் உண்டாகி, பேரன் பேத்திகள் உண்டாகி, யாதொரு குறையும் இல்லாமல் வாழ்ந்தால்- இப்படி வாழ்வது அருமை என்பதால், இப்படி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தால், அவர்களுக்கு மறு திருமணம் செய்கிறார்கள். மணிவிழாக் கொண்டாடுகிறார்கள். நான் அது போலவே சொல்வதுண்டு. இருபத்தைந்து ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள், அறுபது ஆண்டுகள், யாராவது நட்புத்துறையில், உறவுத் துறையில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களுக்கும் கூட அது போல விழா நடத்தலாம். காரணம், நமக்கு அப்படி நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பண்பாடு குறைவு. அதனால்தான் திருவள்ளுவர்.

அன்பின் வழியது உயிர்நிலை

என்று சொன்னார். எனவே நான் யார்? என் உள்ளம் யார்? என்கிற பொழுது, மனிதர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள். அறியாமை என்றால் சில பேர் ஒன்றும் தெரியாமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் தெரியாமை என்பது அறியாமை அல்ல. அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாகப் புரிந்து கொள்ளுதல். செய்தி நிறையத் தெரியும், விசய ஞானம் நிறைய இருக்கும். அவர் ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அவரைப் போலக் குழப்பமான மனம் யாருக்கும் இருக்க முடியாது. தெளிவு இருக்க வேண்டும்.

சிந்தையுள் தெளிவுமாகி, தெளிவினுள் சிவமுமாகி

என்பார் நம்முடைய அப்பரடிகள். தெளிவு தேவை. தெளிவில்லாத குழப்பமான, இதுவோ அதுவோ என்ற ஐயப்பாடுகள், குழம்பிய மனத்தில் இருக்கும். தெளிவான ஒன்றுக்குத்தான் அறிவு என்று பெயர். நமக்கு எது சரியானது என்று புரிந்து கொள்ளுகின்ற முயற்சி இருக்காது. தவறானதைச் சரியென்றும், நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும், இன்பத்தைத் துன்பமென்றும்,