பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

335


கண்ணால் பார்க்க முடியாது போனால் கருத்து என்று ஒன்று இல்லையா?

பகுத்தறிவாளர் உலகத்திற்குக் கண்ணைவிட முக்கியமானது, சிந்தனையும் கருத்தும்தான். விலங்குகளுக்கு மட்டும்தான் கண் முக்கியமான கருவி. நமக்குக் கண்ணை விடக் கூடக் கருத்தும், சிந்தனையும் மிகப் பெரிய கருவிகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் பாரதி வாழ்ந்தான். இப்பொழுது பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு விழாக் காணும் பாரதி என்ற கவிஞன், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற கருத்தைப் பாடினான். ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று சொன்னான். அன்றைக்கு அவன் சந்திரனைப் பார்த்ததில்லை; அவன் பாடுகின்றபொழுது, சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை கூடக் கால் கொள்ளவில்லை.

அன்றைக்குக் கிரகணம் என்றெல்லாம் சொல்லிச் சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அவனுக்குப் பிறகுதான் சந்திரனுக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. அதுவும் தமிழகத்தில் தோன்றாமல், அமெரிக்க மண்ணிலும், சோவியத் மண்ணிலும் தோன்றி இருக்கிறது. எப்பொழுதுமே சிந்தனைக்கும், கருத்துக்கும்தான் தமிழன் சொந்தக்காரன். அவற்றைச் செயல்படுத்துவதை யெல்லாம், யாராவது அயல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். காரணம், இவனுக்குப் பாட்டு, பதவுரை, பொழிப்புரை சொல்வதிலே காலமெல்லாம் கழிந்துவிடும். ஆகவே, எதையெடுத்தாலும் பதவுரை, பொழிப்புரை, விமர்சனங்கள், இவைகளிலேயே இவனுடைய ஆயுட் காலமெல்லாம் கழிவதன் காரணமாக, பாரதி, ‘சந்திர மண்டலத்து இயல்கண்டு தெளிவோம்’ என்று பாடினாலும் கூட, பாரதியின் பேரன் பேத்திகள் அந்த முயற்சியைச்