பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்வதற்கப் பதிலாகச் சோவியத் மண்ணிலும், அமெரிக்க மண்ணிலும் அந்த முயற்சியைச் செய்த பின்பு நாமும் அந்த முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் முதல் வரிசையில் இல்லை என்பதை மறந்து விடக் கூடாது. கடவுளை நம்புவது என்பது வெறும் கண்களால் பார்ப்பது மட்டுமல்ல.

மனித வரலாறு நெடிய வரலாறு, மனிதனுடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட கண்டங்கள் இருக்கின்றன; இவைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்த பிறகுதான் சொல்லமுடியும். இன்றைக்கும் கடவுள் உண்டா, இல்லையா என்று விவாதிப்பது வீண் வியர்த்தமான பொழுதுபோக்கே தவிர, அது எந்தப் பயனையும் தராது. அதுபோல, கடவுளை நம்புவது கூட, ஏதோ பயந்து கடவுள் தண்டனை கொடுத்து விடுவார் என்பதற்கு அல்ல. நான் தெளிவாகச் சொல்லுகிறேன்; கடவுளிடத்திலே எனக்குப் பயமும் கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்லுகிறேன். கடவுளிடத்திலே யாசகம் கேட்கிறவ்னும் அல்லன். சிலபேர் கடவுளிடத்திலே யாசகம் கேட்பதற்கே போகின்றனர் அவர் திரும்ப நம்மைப் பார்த்து, ஏண்டா? ஏற்கனவே நிறையக் கொடுத்திருக்கிறேனே! அதையெல்லாம் உபயோகப்படுத்தினாயா? அதையெல்லாம் உபயோகிக்காமல் துருப்பிடிக்க வைத்துவிட்டு இங்கு ஏன் மீண்டும் வந்து கேட்கிறாய் என்று! கேட்டாலும் கேட்பார். மாணிக்க வாசகரே தம்முடைய திருவாசகத்தில்,

என்னால் அறியாப்
பதந்தந்தாய் யான்
அஃதறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றும்
குறைவில்லை

என்று சொன்னார்.