பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதுகெலும்பு பெற்றது என்று கூடச் சொல்லலாம். வீறு தமிழ் அந்த நாட்டில் நடைபோட்டது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை

என்றார். ஒரு பெரிய அருள்ஞான முழக்கத்தை அந்த உருவம் செய்தது. அவர் பெயர் அப்பரடிகள். அவருக்கும் அந்தக் காலச் சமுதாயம் நஞ்சைக் கொடுத்தது. ஆனால், அப்பரடிகள் நஞ்சைக் குடித்தார்; மகிழ்ச்சியோடு குடித்தார். தயவுசெய்து மறந்து விடாதீர்கள்; சாக்கரடீஸ் செத்தது போல அப்பரடிகள் சாகவில்லை. காரணம், சாக்கரடீஸ் தோன்றிய நாட்டில் நஞ்சு குடித்தும் வாழ்வதற்குரிய கலையைக் கற்றுக் கொடுக்கிற வள்ளுவர் தோன்றவில்லை. தமிழ் நாட்டில் திருவள்ளுவர் தோன்றியிருந்தார்; நஞ்சைக் குடித்தும் வாழ முடியும் என்ற ஒரு நயத்தக்க நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். அந்த வழியில் அப்பரடிகள் குடித்தார். என்ன கலையோடு, என்ன உணர்வோடு நஞ்சு குடித்தால் வாழலாம் என்று சொன்னால், நஞ்சு வைத்திருக்கிறார் இந்தப் பெருமாள் என்பது நான் அறிந்து கொண்டு விட்டேன்; அது நஞ்சு என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன். தெரிந்தும், பெருமாளுக்கு நான் அறிந்தது தெரியாமல் அதை நான் குடிக்க வேண்டும். அது நஞ்சு என்று தெரிந்து கொண்டு விட்டேன் என்று சொன்னால், உடனே மனதில் தோன்றுகிற எண்ணம். முகத்தில் படரும் ஒருவித மரண பயம் முகத்தில் தோன்றி, மரண பீதி என்னைப் பிடித்து ஆட்டும். அப்படி ஆட்டுவதைப் பார்த்துப் பெருமாள் ‘ஐயோ! நாம் நஞ்சு வைத்திருக்கிறோம்’ என்ற செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாரே, இந்தச் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டால் என்ன