பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

357


ஆகுமோ? சண்முகவேல் என்ன செய்வாரோ, என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்படி இல்லாமல் யாதொன்றும் இல்லாததுபோல, நல்ல தூய்மையான பாலை வைத்திருப்பதைப் போல, நினைந்து, மகிழ்ந்து குடித்தால், நீ சாவாய் என்று சொல்ல மாட்டேன்; வாழ்வாய் என்ற பொருளில் ‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்’ என்று சொன்னார்.

காரைக்கால் அம்மையார் அதைத்தான் சொல்வார்,

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்

என்று. ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய நெஞ்சு நல்லதல்லாததை நினைக்காமல் நம்முடைய நெஞ்சு நன்மை! நன்மை! நன்மை! என்று நின்னத்திருக்குமானால், நம்முடைய செங்குருதி தூய்மையாக இருக்கும். அந்தத் துாய்மையான இரத்தம் யாருடைய உடலில் ஒடுகிறதோ, அந்தத் தூய்மையான இரத்தத்தினால் நஞ்சை எடுத்துத் தின்று சீரணித்துவிட முடியும். யாருடைய உள்ளம் நன்று என்று நினைக்காமல் தீமைகளையும் சூதுகளையும், பிணக்கையும், பகைமைகளையும் வேற்றுமைகளையும், நினைக்கிறதோ, அவருடைய உடம்பில் ஓடும் இரத்தம், கெட்டுக் குட்டிச்சுவராகி, அது சாக்கடையைப் போல ஆகிவிடுகிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் ஓட வில்லையோ, அங்கே நோயும் இருக்கிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் இல்லையோ, அந்த உடம்பின் நஞ்சு சேர்ந்தால், அந்த உடம்பைக் கொல்கிறது. எங்கே தூய்மையான செங்குருதி ஓடுகிறதோ, அந்தச் செங்குருதி, உலகத்தின் எல்லாத் தீமைகளையும் எடுத்துச் சீரணிக்கிற சக்தி உடையது என்பது வள்ளுவர் கொள்கை; கோட்பாடு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய நாட்டில் ஒளவைப் பாட்டியார் பார்க்கிறார். இந்த இறைவன் இருக்கின்றானே திருநீலகண்டன், மற்றவர் நஞ்சு குடிக்க