பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

363


தமிழிலிருந்து சைவத்தைப் பிரிக்காதீர்கள், சமயத்தைப் பிரிக்காதீர்கள். அதேபோலச் சமயத்திலிருந்தும் தமிழைப் பிரிக்காதீர்கள். சமயத்திலிருந்து தமிழைப் பிரித்து விட்டால், நமமுடைய நெஞ்சுப் புலன்களை உழ முடியாது. நம்முடைய நால்வர், தமிழிலேதான் சிறந்த முயற்சிகளைச் செய்திருக் கிறார்கள்.

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று பாடுகிறார் சுந்தரர். ஆக, நாளும் இன்னிசையால் திருஞானசம்பந்தர் ஒன்றும் தமிழ் பரப்புவதற்காக வரவில்லை. அவர் பரப்பியது சைவம்தான்; சைவ நன்னெறி தான். திருநெறிய தமிழில்தான் ஓதினார். ஆனாலும் கூட, சுந்தரருடைய எண்ணத்திலே என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று சொன்னார். திருஞானசம்பந்தர் பரப்பியது தமிழ்நெறி, திருநெறி; அன்றைக்குத் தமிழகத்தில் ஊடுருவி நின்ற பிற மொழிக் கொள்கை, தமிழுக்கும், தமிழர் வாழ்வியலுக்கும் உடன்படாத கொள்கை. தமிழ் இசையை மறுத்த நெறி; இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி; மனையறத்தோடு கூடிய வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி. இப்படிப் பல்வேறு புறத்தூய்மை யில்லாத, பண்பாடு இல்லாத நெறிகளை மறுக்க வேண்டிய சூழ்நிலையில்தான், திருஞானசம்பந்தர் இதைச் செய்தார்.

தமிழும் சைவமும், தமிழும் சமயமும் இணைக்க முடியாதவைகள் என்று இங்கே கூறினார்கள். இவைகள் பிரிக்க முடியாதவைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல்தான் நான் மீண்டும் நினைப்