பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வைக்கிறார். இந்தத் திருமணம் செய்து வைக்கிறபொழுது, என்ன அருமையான வாழ்வியல் இருக்கிறது என்று செய்து வைக்கிறார்கள்? இப்பொழுது ஒருவர் இல்லாதபோது, ஒருவருக்காக நாம் பரிந்து பேசப் போனால், யாருக்காகப் பரிந்து பேசுகிறோமோ, அவர்களைத் தரந்தாழ்த்திப் பேசுவது நம்முடைய போக்கில் ஒன்று. ‘என்ன செய்வது? வந்து தொலைத்தான்! நானும் வந்து சேர்ந்திருக்கிறேன். உனக்காக இல்லையென்றாலும் அவனுக்காக இல்லையென்றாலும், எனக்காகவாவது வந்து பேசு என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் தரம் தாழ்த்திச் சொல்லுவது என்பது பழக்கம்! ஆனால், சுந்தரரை நம்முடைய சிவபெருமான் சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிற பொழுது,

சாரும் தவத்துச் சங்கிலிகேள்
சாலஎன்பால் அன்புடையான்
மேருவரையின் மேம்பட்ட தவத்தான்...

என்கிறார். ஏனென்றால் சங்கிலியாருக்கு இரண்டாந் தடவையாகத் திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்ற கவலை வந்துவிடக் கூடாது. அவரைப் பற்றி, சுந்தரரைப் பற்றித் தரக்குறைவாக நினைத்துவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக ‘மேருமலையின் மேம்பட்ட தவத்தான்! சால என்பக்கம் அன்புடையான்’ என்று சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்படி அறிமுகப்படுத்துவது என்பது ஒரு நல்ல கலை. யாரையும் மனங்குளிரப்பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது வளர்கின்ற பயிருக்கு மழைபோல! பாராட்டுவதன் மூலமாகக் கூடச் சில தீமைகளைத் தவிர்க்கலாம். நமக்கு அதில் தரித்திரம் காட்டுகிற பொழுது தான் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவனுக்குப் புகழ், ஒருவனுக்கு இல்லையென்று சொன்னால் அதைத் தாங்க முடியாமல் சமூகம் தவிக்கிறது. இதனால்தான் ‘மேரு மலையில் மேம்பட்ட தவத்தான்; சால என்பக்கம் அன்புடை