பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

369


பார்த்த வாழ்க்கையின் ஊனும், உயிரும், உடலும், உணர்வும் ஒன்றாக இருந்த சமயத்தை நான் பார்க்கிறேன்.

இன்னும் உருக்கமான ஓர் இடம்! திருக்கச்சூர் என்ற ஊருக்குப் போகிறார் சுந்தரர்! நல்ல பன்னிரண்டு மணி வெயில்! பசி! யாரிடத்திலும் பிச்சை கேட்டுப் பழக்க மில்லாதவர். கோயிலுக்கே போகிறார். ஆனால், திருக்கச் சூரிலே இருக்கிற இறைவன் இவருக்கு முன்னாலேயே வந்து காத்துக் கொண்டிருக்கிறான். பசிக்கிறதா? என்று கேட்கிறார். ‘சரி! நல்ல வெயிலாக இருக்கிறது! சிறிது உட்கார்ந்திரு! ஓய்வெடு! நான் போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுச் சிவபெருமான் சாப்பாடு எடுக்கப் போகிறார். நான் சில சமுதாய உண்மைகளையும் இந்த வரலாற்றைப் பார்க்கிற பொழுது பார்ப்பது உண்டு. அது சிலருக்குப் பிடிக்காது போனாலும் அன்பு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். திருக்கச்சூர்க் கோயில் இறைவன்தானே! அவனுக்குக் கோயிலில் சாப்பாடு இல்லையா? ஒரு கட்டி எடுத்துக் கொடுக்கக் கூடாதா? ஆக, திருக்கச்சூர்க் கோயிலிலே இருக்கிற இறைவனுக்கு திருக்கச்சூர்க் கோயிலிலே சோறு கிடைக்கவில்லை சுந்தரருக்குக் கொடுக்க, என்று சொன்னால், அப்பொழுதே இந்தப் பூட்டு, சாவி, அறங்காவலர் முறையெல்லாம் வந்து, கடவுள் உரிமைகள் இரண்டாந்தரமாக மாறி, மனிதர்களுடைய உரிமைகள் மேலோங்கி விட்டதாகத் தெரிகிறது. எனவே, கோயிலிலே அவருக்குச் சோறு கிடைக்கவில்லை. அதனால் தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கப் போகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு மாதிரியும் நினைப்பதுண்டு. இப்பொழுது நாம், கடவுள் எழுந்தருளியிருக்கிற திருக் கோயில்களிலே இருக்கிற மூர்த்திகளை, நிறையப் பேர் இன்றைக்குச் சிலைகளாகத் தான் பார்க்கிறோம்; உருவங் களாகத்தான் பார்க்கிறோம். நம்மை ஆளும் தெய்வம்