பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

371


ஆனால், இங்கே திருக்கச்சூரிலே இருக்கிற இறைவன், கோயிலிலே சாதம் எடுக்காமல், வெளியில் போவதற்குக் காரணம். நம்முடைய நாட்டுக் கோயில்களிலே கடவுளுக்குச் சுவையான பண்டங்களைப் படைப்பது என்பதை மறந்து விட்டோம். எங்கேயாவது தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்த்தால், ஒரு பட்டைச் சோறு. பாவம்! அது ஏமாளிப் பட்ட சோறு என்று அர்த்தம். சுந்தரரோ, சொகுசான பிள்ளை. நெய்யுடன் சோறு கேட்பான். நாம்தான் தினமும் இந்தப் பட்டைச் சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். சுந்தரருக்கு இது ஒத்து வராது. திருக்கச்சூரிலே வீடுகள் இருக்கின்றன. தங்களுடைய கணவனுக்குமாக, குடும்பத்திற்குமாகச் சுவையான சமையலைச் செய்து வைத்திருப்பார்கள் பெண்கள்! அதில் நான்கு வீடுகளில் போய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால், சுந்தரருக்குத் திருப்தியாக இருக்கும் என்று போனரோ என்று தெரியவில்லை! ஆக, பசிப்பதற்குச் சோறு! ஆழ்வார் ஒருவர் பாடினார். ‘உண்கின்ற சோறும், பருகுகின்ற நீரும், தின்கின்ற வெற்றிலை, பாக்கும் ஆனாய்’ என்று சொன்னார். கடவுளை அவர் அனுபவித்த முறை அப்படி! இதிலே சமயம், சமுதாயம் என்பதைத் தயவு செய்து பிரிக்காதீர்கள். வாழ்க்கையே சமயமாக வேண்டும்; சமயமே வாழ்க்கையாக இருக்கவேண்டும்.

சுந்தரர் அவிநாசிக்குச் செல்கிறார். நான் திருமணம் என்று சுந்தரர் திருமணத்தைச் சொன்னேன். இன்னொரு திருமணமும் இருக்கிறது எவ்வளவு சமூக நெளிவுகள் இருக்கின்றன நம்முடைய மதத்திற்கு என்று தெரியும். திருமருகல் என்ற ஊரிலே ஒரு திருமணம் நிகழ்ந்தது. திருமருகல் என்பது தஞ்சை மாவட்டத்திலே உள்ள ஒரு திருத்தலம். திருமருகலுக்குப் பக்கத்தில் ஏழெட்டுக்கல் தொலைவில் ஒரு வணிகச் செட்டி குடும்பம். இந்தச் செட்டி