பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3878

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோயிலுக்குச் சொந்தக்காரன் என்று சொல்ல வேண்டாமா? அதனால்தான், திருநாவுக்கரசர் பெண்ணாகடத்திற்குச் செல்லும் பொழுது, நான் உன்னுடைய அடியான் என்பதை உலகுக்கு அறிவிக்குமாறு, என்னுண்டைய தோள்பட்டையில் இடபச் சின்னத்தைக் குறி என்று சொன்னார்; அதைப் பொறிக்கச் சொன்னார். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மலேசிய நாட்டிலே தோட்டத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான பேர் வாழ்கிறார்கள். அவர்கள் நம்மவர்கள் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது? என்ன சான்று இருக்கிறது? ஏதோ இயற்கையாக வளர்கின்ற காடுகளைப் போல அவரவர்கள் எப்படியோ தங்கள் சமயத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம்முடைய நல்லூழ்.

ஆனாலும் இன்றைக்கு உலகத்தில் பிரளயம் போலப் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கோயில்களைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில்கள் என்கிற நடைமுறைகளை உருவாக்கி, எல்லாரும் வழிபாடு செய்வதைக் கோயிலில் பதிவு செய்து, ஆண்டுக் கட்டணங்கள் ஏற்படுத்தி, திருக்கோயிலிலே பாக்கு வைத்து திருக்கோயிலிலே மாலைகள் வாங்கித் திருமணம் செய்ய வேண்டும். இந்தக் கோயிலைச் சார்ந்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இரண்டு இந்து சகோதரர்கள் தங்களுக்குள் பிரச்சனைகள் இருக்குமானால், கோயிலில் வைத்துப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கோயிலைச் சார்ந்தோர் வெளியே முறையீட்டு மன்றங்களுக்குப் போகக் கூடாது என்கிற நடைமுறைகளை-பழக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதை நான் சொல்லவில்லை-சுந்தரர் செய்து காட்டியிருக்கிறார்; சிவபெருமான் செய்து காட்டி இருக்கிறார்.

அதேபோல, கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்; பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள்;