பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

385


கோயில் எல்லாம் அங்கு வருகிறவர்களின் பட்டியலைப் பதிவு செய்ய வேண்டும். ‘இந்த ஆள் காணோம்’ என்று சொன்னால், இந்த மகா மாரியம்மன் கோவிலைச் சார்ந்தவர் என்று போய் உரிமை கொண்டாட வேண்டும். மனிதனுக்கு உரிமை கொண்டாடுங்கள். இன்றைக்குத் தங்கத்திற்கும், வெள்ளிக்கும், அர்ச்சனைக் காணிக்கைக்கும், காணிக்கும், பூமிக்கும் உரிமை கொண்டாடுகிறோம். இவைகளை விட்டு நாம் மனிதர்களை உரிமை கொண்டாடி, இவன் அழுதால் அவன் அழுவான்; இவன் சிரித்தால், அவன் சிரிப்பான் என்ற புதுநெறியை, பொதுநெறியை மீண்டும் சமுதாயத்திலே கொண்டு வரவேண்டும்.

எனவே திருமணம் செய்து வைத்தது கோயில்; நண்பனாக இருந்து பாதுகாத்தது கோயில்; கணவனும் மனைவியும் சண்டை போட்டிருந்தால் சேர்த்து வைத்தது கோயில்; இறந்தவர்களை எழுப்பியது கோயில்; சமாதானம் செய்து வைத்தது கோயில்; இன்னும் என்ன பாக்கி சமுதாயத்தில்! என்று எண்ணிப் பாருங்கள். எனவே நம்முடைய சமயமும் சமுதாயமும் இணைந்த ஒன்று. அந்த உயர்ந்த சமுதாய நெறியை மீண்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மீண்டும் மலேசியா நாட்டைப் பொறுத்த வரையில் ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை மூலம் கோயில் தவறாமல் மதக் குருக்கள்மார்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் தொடர்ந்து சென்று பாதுகாக்க வேண்டும். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பர். இது மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஊட்டுகிற அறிவு நினைந்து என்ன தேவை என்பது அல்ல ‘நினைந்து’ நாம் நம்முடைய சமூகத்தினுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து செய்ய வேண்டும் என்பது. ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பதில் ‘சாலப் பரிந்து’ என்பதற்கு என்ன பொருள்? இப்பொழுது கூட சிலபேர் உதவி