பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். பன்னெடுங் காலமாகக் கழிபேருவகையுடன் நல்வாழ்வுச் சூழலை உருவாக்கி உதவிய சைவநெறி பற்றிய எண்ணமும் செயலும் நம்மிடையே தோன்றி வளர வேண்டும். மனிதனின் வாழ்வை மலரச்செய்யவும் - மணம் பரப்பச் செய்யவுந்தான் மதங்கள் உதவுகின்றன. வெறும் சடங்குகள், உபதேசங்கள், போதனைகள் போன்றவற்றோடு மதம் நின்றுவிடக்கூடாது. அச்சம், ஆத்திரம், புகைச்சல், பொறாமை போன்றவை இன்றைய மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இத்தகு இழிந்த மனப்பான்மையை ஒழிக்க மதம் உதவவேண்டும். உயிர்த்தொண்டுக்கு - உலகத் தொண்டுக்கு ஆன்மாவை ஆற்றுப்படுத்தும் பெரும் பொறுப்பு சமயத்துக்கு உண்டு.

அச்சமும் ஆத்திரமும் போன்றே ஐயமும் சஞ்சலமும் குழப்பமும் மனித மனங்களில் குடிகொண்டிருக்கின்றன. சந்தேகத்தை மாற்றச் சைவத்தை ஒட்டிய சில முடிவுகள் உதவுகின்றன. சைவசித்தாந்தமென்பது ஒரு சிவநெறித் தத்துவம். முடிந்த முடியான கொள்கையைக் கொண்டது. சிவத்திரு ஆறுமுகநாவலர் அவர்கள் “சைவ சித்தாந்தமே சித்தாந்தம்; மற்றவையெல்லாம் பூர்வபக்கங்கள்” என்றார். சிந்தை செல்லுமிடமெல்லாம் சென்று முடிந்த முடிபைக் காண்பது சித்தாந்தம், சைவசித்தாந்தக்காரர்கள் மனிதகுலச் சஞ்சலங்களை அகற்றுவதோடு - நாத்திகத்தைத் தர்க்கமுறையில் வெல்லலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன். இனித்தெளிவு வரலாம்; வெல்ல முடியும். குழப்பமே தெளிவுக்கு அடிப்படை. இப்போது சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சில ஒரு குழப்ப நிலையை உண்டாக்கியிருக்கின்றன. இனித்தெளிவு வரலாம்; கட்டாயம் வந்தே தீரும்.

“சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி” என்றார் அப்பரடிகள். தெளிவிலே சிவநெறி ஊறிச் செம்மை