பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பூசைகளை முறையாக சிவாச்சாரியார்கள் செய்து, தகுதியுடையவர்கள் வந்தால் ஆன்மார்த்த பூசை செய்வதற்கு உடனாக இருந்து துணை செய்வது என்பதே பொருள். ஒரோவழி அங்ஙனம் ஆன்மார்த்த பூசையாகச் செய்து கொள்ள இயலாதவர்களுக்காகவும் இவர்கள் செய்து வைக்கலாம். வரலாற்றுச் செய்திகளுக்கும் சிவாகமத்திற்கும் திருமுறைகளுக்கும் ஒத்த நடைமுறைக்கிசைந்த உண்மை இதுவே.

7. இம்முறை, நடைமுறைப்படுத்தப் பெறுவதால் பிறப்பினால் சாதி முறை இல்லாமல் போகிறது. தகுதியால், ஆசாரத்தால், சீலத்தால் மட்டுமே வேற்றுமையிருக்கும்.

8. இம்முறையை நடைமுறைப் படுத்துவதன் மூலம், ஒவ்வொரு திருக்கோயிலும் எழுந்தருளியிருக்கும் இறைவனை, ஆன்மார்த்த நாயகனாகக் கொண்டு வழிபடுவோர் பட்டியல் உருவாகும். அது திருக்கோயில் வளர்ச்சிக்கும் துணை செய்யும், தகுதியும் விருப்பமும் உடையவர்கள், வழிபாடு செய்து கொள்வதற்கு வாய்ப்பிருந்தால், அவர்கள் பத்தின்மயிலும் ஞானத்திலும் சிறந்து வளர்வர். இதுவே இன்றைக்குச் சரியான முறை என்று கருதுகின்றோம்.

9. அல்லது அரசு தீவிரமாக மாற்றங்கள் செய்ய விரும்புமாயின் அது பற்றியும் ஆலோசிக்கலாம். ஆனாலும் ஒரு சமயச் சார்பற்ற அரசு, ஒரு சமயத்தில் சேரிடையாகச் சீர்திருத்தம் செய்யப்புகுவது வரவேற்கத் தக்கதன்று. நல்லூழ் இன்மையின் காரணமாக, நம் சமயத் தலைவர்கள் தம்முள் மாறுபாடு கொண்டும் ஒத்துணர்வில்லா