பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

93



மலும் இருப்பதாலும் திருக்கோயில் பேணல், சமய நெறிபேணல், அவற்றை வளர்த்தல், காலத்திற்குத் தேவையான புதுமை நெறி காணல் ஆகியன பற்றி ஒருங்கிணைந்து சிந்திக்காததாலும், சிந்தித்து வழி நடக்காததாலும் காலத்தின் தேவைகள் நெருக்குவதால் முறையான வழி காட்டுதலின்றிச் சமுதாயம் தன் போக்கில் செல்கிறது. அரசு அதற்கேற்றவாறு சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யவும், சீர்திருத்தங்களைச் செய்யவும் அவாவுகிறது. அரசு நம்முடைய சமயத் தலைவர்களையும் சமய அறிஞர்களையும் கொண்ட தக்க மாநாடுகளைக் கூட்டி, நன்றாகச் சிந்தித்து முறையாகச் சீர்திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது; ஏற்புடையதும் ஆகும்.

தமிழகத் திருக்கோயில்களில் காலத்திற்குத் தேவையான மாறுதல் ஏற்பட்டு வந்துள்ளதைத் திருக்கோயில்களின் நடைமுறைகளும் உணர்த்துகின்றன; வரலாறுகளும் உணர்த்துகின்றன. பல சிவாலயங்களில், சிவாச்சாரிய மரபினர் அல்லாதவர்களும், சிவாகம முறைப்படி, தீக்கை முதலியன பெறாதவர்களும் கூட அமர்த்தப்பெற்றுள்ளனர். சான்றாக, திருவானைக்கா, திருப்பெருந்துறை, சிதம்பரம், இராமேச்சுரம், திருச்செந்தூர் ஆகிய திருத்தலங்களைக் குறிப்பிடலாம். ஏன்? ஆகமத்தில் உயிர்ப்பலியிடுதல் சொல்லப் பெறுகிறது. ஆனால், அரசின் உயிர்ப்பலி தடைச் சட்டம் அதனைத் தடுத்து விடவில்லையா? திருக்கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாதென்பது ஆகமத்தின் விதி. ஆனால் மெய்கண்ட சாத்திரங்களும் திருமுறைகளும் இதை மாற்றித் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கியுள்ளன. அப்பரடிகள் அருள் வாக்கு30 நினைக்கத்தக்கது. இக்கருத்தை அரண் செய்யும் வகையில் மாதவச் சிவஞான முனிவர் அருளிய வாக்கும்31எண்ணத்த்க்கது. பெற்றான் சாம்பா