பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

103


தோன்றின? கடவுள் மறுப்பு இயக்கங்கள் தோன்றுவதற்குரிய அடிப்படைக் காரணங்களை மாற்ற முடியுமா? அப்படியானால் ஏற்றுக்கொள்ளத்தக்கன எவை? விடத்தக்கன எவை? என்று ஆய்வு செய்வது சித்தாந்தச் செந்நெறிக்கு அரண் செய்ய உதவியாக இருக்கும். பரபக்கத்தில் ஏற்படும் தெளிவுதான் சுபக்கத்தில் துணிவைத் தருகிறது என்பது நமது மரபுவழிக் கருத்து. அதனால், நாம் “சைவசித்தாந்தமும் மார்க்சியமும்” என்ற தலைப்பை எடுத்துக் கொண்டோம். இவ்விரண்டு தத்துவங்களையும அடக்கத்துடன் கற்கும் மாணவனாக இருந்து வருகின்றோம். இந்த ஆய்வினைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடனேயே மார்க்சியத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டுள்ள சோவியத்துக்கும் சீன நாட்டுக்கும் சென்று வந்தோம்.

மார்க்சியமும் சைவ சித்தாந்தமும் இயல்பாகவே ஒன்றாயிருத்தல் இயலாது. சைவ சித்தாந்தம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில், முழுமைநிலை யடைந்தது. உலகாயதம் வளர்ந்து கி.பி. 19ஆம் நூற்றாண்டில் மார்க்சியமாக முழுமையடைந்தது. கால வேறுபாடு - இட வேறுபாடு இவைகளுக்கிடையில் வேற்றுமை மிகுதியும் உண்டு. ஆயினும் பெரும்பான்மையான மானிடச் சிக்கல்கள் உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கால்ந்தோறும் கூட மிகச் சாதாரண மாற்றங்கள் தாம் ஏற்படுகின்றனவே தவிர அடிப்படைச் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கண்ட பாடில்லை. இரண்டு பொதுவுடைமை நாடுகளுக்கிடையே கூடச் சிக்கல்கள் நிலவுகின்றன. ஆதலால் காலத்தில் வளர்ச்சி, பெளதிக வளர்ச்சிகளை மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறதே தவிர, மானிட சாதியின் அகநிலை-புறநிலையில் பெரிய மாற்றங்ளைக் காணோம். இன்றுள்ள சூழ்நிலையில் இவ்விரண்டு தத்துவங்களையும் நன்றாக ஆய்வு செய்து இவைகளுக்கிடையே யிருக்கிற முரண்பாடுகளைத் தவிர்த்துச்