பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

109


உயிர்கள் படைக்கப்பட்டனவா?

சைவ சித்தாந்தம் உயிர்கள் கடவுளால் படைக்கப் ட்டன அல்ல என்று கூறுகிறது. உயிர்கள் என்றும் இயற்கையில் உள்ளவை என்றும் கூறுகிறது. இதை

“எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசுவருக்கம் என உரைப்பார் உணர்ந்தோர்”8

என்று சிவப்பிரகாசம் கூறுகிறது.

மார்க்சியம் ‘உயிர்கள் இயற்கையில் பரிணமித்தன’ என்ற டார்வின் உயிரியல் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.

“இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் - மனிதன் உள்ளிட்ட - உயிரினங்களின் முழுத் தொகுதியானது, ஆதியில் ஓருயிரணுவாக இருந்த ஒரு சில மூலக் கருக்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற, ஒரு நீண்ட நிகழ்வுப் போக்கின் விளைவுதான் - இவையுங்கூட இராயாசன வழியில் தோன்றிய ஊன்மம் (Protoplasam) அல்லது புரதம் (albumen) என்பதிலிருந்து தோன்றியவை”9 என்பது டார்வின் கொள்கை.

“புரதப் பொருள்களுடைய இருத்தலின் பாங்கே உயிர்; அதன் சாராம்சமான ஆக்கக்கூறின் உள்ளடக்கம் அவைகளின் புறத்தே உள்ள இயற்கைச் சூழலுடன்