பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

123


முன்னே தெரிகிற இந்த உண்மைக்குக் கட்புலனுக்கு வராத தத்துவத்தைப் போட்டுக் குழப்புவதில் என்ன பயன்?

பிற்போக்கு வாதிகள் வினையின் பயனாகிய செல்வத்தை, வினை இயற்றியோருக்கு உரிமையாக்காமல் அவர்களின் பங்கை எடுத்துக் கொள்வதற்காக, வினைக்கு அர்த்தமற்ற கருத்தைக் கற்பித்துள்ளனர் என்பதை முன்னே கூறியவற்றால் அறியலாம். இதுவே சைவசித்தாந்தத்தின் கொள்கை, மார்க்சியம் சுரண்டலை அறவே கண்டிக்கிறது. எப்படி உழைப்பாளி சுரண்டப்படுகிறான் என்பதையும் அதை மாற்றும் வழியையும் கூலி, விலை, இலாபம் என்ற தத்துவத்தின் வழி தெளிவாக விளக்கிய முதல் மேதை மார்க்சு தான். ஆக, பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகள் சைவ சித்தாந்தச் சமயத்திற்கும் மார்க்சியத்திற்கும் முரண்பாடில்லை.

இறைவன் முதற் பொருளே

உயிர்கள், வாழ்வதற்கென்று அமைந்தது இந்த உலகம். இந்த உலகம் இயற்கை, இது கடவுளால் படைக்கப்பட்டதன்று என்ற கருத்தில் சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இசைந்த கருத்துடையனவாகவுள்ளன.

“நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே”29

என்பது ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து. இப்பாடலில் குறிக்கும் “முகிழ்த்தன” என்கிற சொல் தன் வினைச் சொல். அதாவது தாமே தோன்றின என்பதே கருத்து. இங்கு மூவகை உலகம் “அவன், அவள், அது” என்று சுட்டப்படும் மூவுலகே தவிர, பெளராணிகத்தில் கூறப்படும் கட்புலனாகாத உலகங்களையல்ல என்பதை அறிக. ஆதலால் உலகம் தோற்றுவிக்கப் பெற்றதன்று திருக்குறளும் கூட, உலகத்திற்கு முதற்