பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

127


தொன்மை வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பர் திருமேனியாகவே இருந்திருக்க வேண்டும் என்பது நூலறிந்தோரின் துணிபு. சங்க இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் அம்மையப்பர் திருவுருவமே போற்றிப் பரவப் பெறுகிறது.

“....சேர்ந்தோள் உமையே
செவ்வான் அன்னமேணி.”35

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன்.....”36

“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று”37

என்பன அறிக.

திருக்குறளில் வரும் “ஆதிபகவன்” என்ற சொல்லுக்கும் சக்தியைப் பங்கிலுடையவன் என்பதுதான் பொருள்.

“தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ”38

என்பது திருவாசகம். அம்மையப்பர் திருக்கோலத்தையே “தொன்மைக்கோலம்” என்று மாணிக்கவாசகர் குறிப்பிடு கின்றார்.

“அண்ணலார் அருட் சக்தியும் சிவனும்
ஆய தன்மையின் அன்று தொட்டுலகம்
பெண்மை ஆண்மை என் றிருவகைப் புணர்ப்பாற்
பிறங்கும்............39

என்னும் காஞ்சிப்புராணத் திருப்பாடலும் காண்க. சைவத்தின் உயிர்நாடியாக விளங்கும் திருக்கோயில் வரலாற்றில், மதுரைத் திருக்கோயில் வரலாறு - சிறப்புடையது. அங்கு,