பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





2


கடவுளைப் போற்று!
மனிதனை நினை!

வாழ்க்கையின் முதற்படி

மயம், ஒரு சடங்கல்ல; கண்மூடிப் பழக்கமல்ல. சமயம் ஒரு வாழ்வியல் கலை. வாழ்வாங்கு வாழத் துணை செய்வது சமயம். சமயம் நம்பிக்கையின் பாற்பட்டது; நல்லறிவின் பாற்பட்டது சமயம் உயிரியல் அறிவியல். உயிர், அறிவுபெறத் தக்கது; உணர்வு நலன்கள் பெறத்தக்கது. சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடி இன்பமாக அமைத்துக் கொள்ளத் துடிப்பது. ஆர்வம் காட்டுவது. ஆயினும் நடப்பது என்ன? உயிர் அறியாமையின் வயப்பட்டுக் கிடக்கிறது. அதனால் துன்புறுகிறது; அல்லற்பட்டு அழுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று; ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிந்திருப்பதே அறியாமை. அதாவது, நன்மையைத் தீமையென்றும், தீமையை நன்மையென்றும் கருதுவது; உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் கருதுவது இன்பத்தைத் துன்பமாகவும் துன்பத்தை இன்பமாகவும் கருதுவது; நியாயத்தை அநியாயமாகவும்