பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

191


தையும் ஒன்றாக்கி இந்து மதம் என்று பெயர் சூட்டியதாகக் கூறுவர். எது எப்படியிருப்பினும் இந்துமதம் என்ற ஒன்று வேதம், சாத்திரம், ஆகமம், திருமுறை திவ்வியப்பிரபந்தங்கள் ஆகிய எந்த நூல்களிலும் இல்லை. இந்து மத வரிசைப் பட்டியலில் இன்று ஜைனமதம்கூட சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்து மதம் என்ற வெறும் பெயரில் ஒரு சமயத்தை உருவாக்குவதும் அதற்கு இதுதான் கொள்கையென்று நிர்ணயிப்பதும், அந்த மதத்திற்கு இன்னார்தான் தலைவர் என்று உரிமை கொண்டாடிக் கொள்வதும் வரலாற்றின் அடிப்படையில் இல்லாத ஒன்று. தத்துவங்கள் அடிப்படையிலும் ஏற்புடையதன்று.

இன்று காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முயற்சியைக் கடுமையாகச் செய்துவருகிறார்கள். ஆனால், கொள்கையளவில் வேற்றுமையில்லாத சிருங்கேரி பீடம், “காஞ்சி காமகோடி பீடம் ஆதிசங்கரர் நியமித்த நான்கில் ஒன்றில்லை” என்ற நூல் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இது அவர்களுக்குள் இருக்கும் சண்டை மற்றவர்கள் அந்தச் சண்டையைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிசெய்வதோ விமர்ச்சிப்பதோ நாகரிகம் இல்லை. ஆதலால் அதுபற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. இந்து மதம் என்பது சைவம் வைணவம் என்னும் இரண்டு பெரும் பிரிவை உள்ளடக்கியதாக வழங்கப்பெறுகிறது. இந்த இரண்டு பெரும் பிரிவுகளின் தனித்தன்மையை, இந்து மதம் என்ற பேரமைப்பை விரும்புகிறவர்கள் போற்றிப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தனித் தன்மையைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறார்கள். ஆனால் சைவ சித்தாந்தச் செந்நெறிக் கொள்கைகளை திருமுறைகள் வகுத்துத் தந்த கோட்பாடுகளை வைணவர்களைப் போலப் பாதுகாக்கத் தவறியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சைவ சம்யத்தைச் சார்ந்தவனைக் கேட்டால், தான் வழிபடும் கடவுள் சிவன்