பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்துள்ள பார்ப்பனியத்தோடு கூட்டுச் சேராம லிருந்தால் நமது சமய நெறிகளில் தீண்டாமை பற்றியிராது. பார்ப்பனியத்தின் வழித்தோன்றிய சாதி வேற்றுமை கற்பிக்கும் நெறிகளோடும் தீண்டாமையோடும் நமது சமய நெறி தொடக்க காலத்திருந்தே எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது.

உலகப் பொது மறையாகிய திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று கூறியிருப்பதறிக. நமது ஞானாசிரியராகிய அப்பரடிகள்,

“சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங் கொண்டேன் செய்வீர்”

என்றும்,

“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யர்ம்வணங்கும் கடவு ளாரே”

என்றும்,

சாதி வெறியர்களோடு போராடியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதுபோலவே திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும் “சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை” என்றருளிச் செய்திருப்பதையும் அறிக.

இவையெல்லாம் சாதிமுறைகளைக் கற்பித்துச் சமுதாயக் கேடுசெய்யும் சிறு நெறியை எதிர்த்தெழுந்த கிளர்ச்சிகள். ஆயினும் இந்தக் கருத்துக்கள் சமுதாயத்தில்