பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

211


நிலையான தீர்வு காணமுடியும் என்று நம்புகின்றோம். அதே நேரத்தில் சமயச் சார்பற்ற ஓர் அரசு நிலவுகிற நாட்டில் புறத் தூண்டுதல்கள் மூலமோ வேறுவகையான ஊக்க சக்திகளை வழங்குவதன் மூலமோ மதமாற்றம் செய்வது விரும்பத்தக்கதல்ல. அப்படி மதமாற்றம் செய்ய நாம் அனுமதித்தோமானால் கடைவீதிச் சண்டைபோல் காலப் போக்கில் இன, சமயச் சண்டைகள் தோன்றி நாட்டில் ஆங்காங்கு அமைதியும் சமூக இனக்கங்களும் கெட்டுப் போகும்.

விருப்பம் உடையவர்கள் குறிப்பிட்ட வயது வந்தபிறகு, தங்களுடைய மத அனுபவத்தின் அடிப்படையில் மதம் மாறிக்கொள்வதை நாம் நிச்சயம் அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் செயற்கை முறையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக மதம் மாற்றுகிற முறையைத் தவிர்க்க அரசு ஏதாவது செய்யலாமா? என்பதை இந்தத் தருணத்தில் ஆலோசிக்க வேண்டும். இப்படி நாம் சொல்லுகிற ஆலோசனை ஒரு மதத்திற்குச் சாதகமாகவும் இன்னொரு மதத்திற்குப் பாதமாகவும் இல்லை. இந்து மதத்தினைச் சேர்ந்தவர்கள்கூடப் பிற மதத்திலிருந்து திரும்ப எடுப்பதை அவர்கள் விருப்பம் வந்த பிறகு எடுப்பதுதான் சிறப்பான முறை. இல்லையானால் மத சம்பந்தமான பழக்க வழக்கங்கள் இன்று இந்த மதத்தில், நாளை அந்த மதத்தில், திரும்ப இந்த மதத்தில் என்பதைப் போலக் கேலிக்குரிய பழக்க வழக்கங்களாக மாறிவிடும். எல்லா மதங்களின் தலைவர்களும், சமய ஆசிரியர்களும் மதத்தை இந்த மாதிரி கேலிக்குரியதாக்காமல் இஃது உயர்ந்த வாழ்க்கை முறை; ஒப்புரவோடு வாழவேண்ய வாழ்க்கை முறை என்பதைக் கவனத்திற்கொண்டு சமய ஒருமைப்பாட்டையும்-சமூக இணக்கங்களையும் உருவாக்கத் துணைசெய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மதமாற்றம் நிலையானது என்று நாம் கருதவில்லை. ஏதோ இப்போது ஓர் அனற்காற்றுப்போல வீசுகிறது; ஓர்