பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

221


கொள்கையையும் எதிர்க்கின்றனர். “ஒன்றே குலம்” என்ற திருமந்திரத்தில் நம்பிக்கை இல்லை. ஆதீனத் தலைவர்களிலிருந்து பீடாதிபதிகள்வரை, அர்ச்சகளிலிருந்து பரிசாரகம் வரை சாதிமுறைகளே இடம்பெறுகின்றன. மேலாதிக்கம் பெற்றுள்ள சாதிகளே ஏகபோக உரிமைகள் கொண்டாடுகின்றன; அனுபவிக்கின்றன.

இந்தச் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர் திராவிட கழகத்தினர். எல்லா மதங்களிலேயும் கோடீசுவரருக்கு மரியாதை மிகுதியும் உண்டு. ஏழைகளுக்கு மிச்சம் “இரக்கம்” தான். மதத்தலைவர்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தகுதி, பொன்னாடைகள், ஆசீர்வாதங்கள் எல்லாம் சுரண்டல் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களுக்குத்தான். இதனால் திராவிடர் கழகத்தினரை எதிர்க்கின்றனர்; பொதுவுடைமை வாதிகளை எதிர்க்கின்றனர்.

மதங்களின் நோக்கம்!

மதங்களின் தோற்றம் மனித குலத்தை வளர்த்து வாழ்வித்து இன்ப அன்பில் திளைக்க வைப்பதுதான். கடவுள் நம்பிக்கையின் ஒரே இலட்சியம் மனித குலத்தை ஒன்றுபடுத்தி எல்லாரையும் சமநிலையில் வாழவைப்பது தான்! அதனால்தான் கடவுளை உயிர்க் குலத்திற்குத் தாய்-தந்தை என்று உருவகம் செய்து காட்டினர்; கற்பித்துத் தந்தனர். இன்றைய மத அமைப்புக்கள் இந்தப் பாடத்தை மறந்துவிட்டன போலும்!

மதவளர்ச்சிக்குரிய பணிகள்

சாதி வேற்றுமைகள், இன ஒதுக்கல்கள் என்ற தீமை உள்ளவரை மதங்கள் வளரா. அதுபோலவே மனிதகுலத்தை வறுமையும் ஏழ்மையும் வருந்தும்வரையில் மதங்கள் வளரா. மனித குலம் அறியாமையில் கிடந்து உழலும்வரையில் மதங்கள் வளரா. ஆதலால் ஒரு மதத்துக்குப் பகை பிறிதொரு