பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சட்டத்தைவிடச் செல்வாக்குடையவனாக விளங்குகின்றன. இதைத் தவிர்க்கவேண்டும். “மதம் என்பது தனிப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கை சம்பந்தமுடையது. மதத்திற்கு சமூகத்திலும் - நாட்டிலும் என்ன வேலை” என்று காந்தியடிகள் கேட்டார். ஆதலால் இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை முறைப்படுத்த இந்தியச் சட்டமே போதும். மற்றபடி மதத்தின் பெயரால் உள்ள சட்டங்கள் அவசியமா? இந்திய அரசியல் சட்டம் வழங்குகின்ற இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை இந்த மதச் சட்டங்கள் கொடுத்துவிடுகின்றன. இந்திய மக்கள் இந்திய அரசியல் சட்டம் ஒன்றுக்கு விசுவாசம் உடையவர்களாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய பணிகளைச் செய்ய இந்திய சமயங்களின் மையம் பயன்படும். இது காலத்தின் தேவை. நடுவண் அரசு செய்யுமா?

—'மக்கள் சிந்தனை—15-5-83


மனிதவள மேம்பாட்டிற்கு
ஆன்மிகம்

னிதவளம்! ஆம்-இந்த உலகில் ஈடும் இணையும் இல்லாத வளம் மனிதவளமே! ஆம் மனிதவளம் படைப்பாற்றல் உடையது. இயக்கத் தன்மை உடையது! ஆளுமை உடையது; ஆயினும், ஏன்? இன்று நமது நாட்டில்-மனிதம் என்பதும் ஒரு வளமாகத் தோன்றவில்லை. ஏன் மனிதனேகூடத் தன்னைவிட தனது ஆற்றலைவிட, மனித சமூகத்தைவிடப் பணத்தையே பெரிதெனக் கருதும் புன்மையைக் காண்கிறோம்; இந்தப் புன்மையிலிருந்து மனிதத்தை மீட்டுத் தன்னுடைய வளத்தை-ஆற்றலை உணரச் செய்வதே கருத்தரங்கின் நோக்கம்.

மனித வளத்தை உயிரியல், இயற்பியல் என்று அறிவியல் மரபியல்-ஆராய்கிறார்கள். இயற்பியலில்