பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

227


கடவுளைச் சார்ந்தது என்பது உண்மை. ஆனால் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்தது என்றால் கடவுளை மட்டுமே சார்ந்தது என்று கொள்ளுதல் கூடாது. ஆன்மாவின் முயற்சிகளே வாழ்விற்குப் பெரிய துணை. கடவுள் தனித் துணையேயாம்.

இயற்பியல் வேதியியல்கூட காலத்தில் நிகழாத போது மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதுபோல ஆன்மிகத்திலும் காலத்தில் நிகழும்போது ஆன்மா வளர்கிறது-வாழ்கிறது - உயர்கிறது. ஆன்மிகம் என்றால் வெறும் சடங்குகள் தோத்திரங்கள் என்று பொருள் கொள்ளுதல் கூடாது. இன்று கடவுளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் சடங்குகள் பயனற்றவை; ஆன்மாக்கள் கடவுளை எண்ணுதல் வேண்டும்; சிந்தனை செய்யவேண்டும். கடவுட் பண்புகளைச் சார்ந்து வாழ்தல் வேண்டும்; இதுவே ஆன்மிகம்.

வேளாண்மையில், பயிர் செய்தலைவிடக் களை எடுத்தலும் பயிர்ப் பாதுகாப்பும் இன்றியமையாதன. அது போல ஆன்மிகத்தில் வேளாண்மை என்பது கடவுளும் ஆன்மாவும் ஒன்றோடொன்று கலந்து செய்யும் ஞானவேள்வி யாகும். இந்த வேள்விக்குப் பாதுகாப்பே பத்திமையும், அன்பும், தொண்டுமாகும். ஆன்மிக வாழ்க்கையின் பயன் ஞானமேயாகும். “ஞானத்தால் அன்றி வீடு பேறில்லை” என்பது மெய்கண்ட சித்தாந்தம். ஞானம் என்பது பேரறிவு. அதாவது அறியாமைக் கலப்பிலாத அறிவு. இந்த அறிவை ஆன்மா பெறுதலும் இந்த அறிவின் பயானாகிய இன்ப அன்பில் திளைப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள்.

ஆன்மாக்கள் இந்த உயர்ந்த குறிக்கோளை அடைய உள்ள வாயில்களில் ஒன்று பத்திமை. ஆன்மாவை-உயிரை இயல்பாயமைந்துள்ள கடினப் போக்கை நெகிழ்விக்கும். ஆன்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும். பத்திமை ஒரு செயலூக்கி,