பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இவர்களுக்குப் பயத்திலிருந்து கடவுள் நம்பிக்கை தோன்றியது. நமது மரபு வழிக் கொள்கைப்படி பயம் தீது, பயம் மிக மிகக் கொடியது. பயத்திலிருந்து ஆன்மாக்களை மீட்பதுதான் சிறந்த அறம். ஆதலால்தான் நமது நூல்கள்,

“சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கள் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரன்முத லோரும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை”

—(திருநாவுக்கரசர் 4 ஆந்திருமுறை 11)

வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் விழிலென் வேலைநஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே!

(திருநாவுக்கரசர் 4 ஆம் திருமுறை 1057)

"........ எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில்என் ஞாயிறு எமக்கு”

(மாணிக்கவாசகர் - திருவெம்பாவை 19)

என்றெல்லாம் அருளியுள்ளன. இறைவனின் திருக்கரங்களில் ஒன்று அபயக்கரம் என்பதையும் அறிக. அதாவது உயிர்களைப் பயத்திலிருந்து மீட்கும் கை-அபயக்கை

நமது கடவுள் நம்பிக்கை அவாவுதல் அடிப்படையில் தோன்றியது. நாம் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும், நமது