பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதாவது உயிர்கள் துய்க்கும் இன்ப துன்பங்கள் அவரவர் வினை வழிப்பட்டன என்பது கருத்து. இத்தகு பாடலடிகள் சிவநெறிக் கொள்கையின் விளக்கங்களே.

இக்கருத்துக்களையே திருக்குறளும் காப்பியங்களும் வளர்த்தன. இன்றுவரை உயிர்ப்போடு வளர்ந்து வரும் சமயம் சித்தாந்தச் சிவநெறி.

சிவநெறி ஒரு கடவுள் நம்பிக்கையுடையது. உயிர்களைப் பொறுத்தவரையில் அவை பல என்னும் கொள்கையுடையது. வழிபாடு என்பது ஆன்மாவின் செயல்; ஆன்மாவின் முயற்சி வழிபாட்டுக்குச் சடங்குகள் அளவோடு இருக்கவேண்டும். அதாவது ஆன்மாவை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தும் அளவுக்கே சடங்குகள் இருத்தல்வேண்டும். சித்தாந்தச் சிவநெறியில் சாதி வேற்றுமைகள் இல்லை; ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லை. சித்தாந்தச் சிவநெறி ஓர் உயர்ந்த சமயநெறி; வாழ்வியலைச் சார்ந்து நின்று வளர்க்கும் நெறி.

எந்த ஒரு சமயமும் இயக்கத் தன்மையைப் பெற்றால்தான் வளரும். தமிழர் சமயநெறி இயக்க வடிவம் பெறாமலும் இல்லை. அதேபோழ்து வளர்ந்து நிலைபெறு தலுக்குரிய அளவுக்கு இயக்க வடிவம் பெறவில்லை என்ற குறையை நாம் உணர்தல் வேண்டும். இயக்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது இடையறாது மக்களை நாடித் தன் வயப்படுத்திக் கொள்வதே இயக்கத்தின் செயற்பாடு! பண்டைக் காலத்தில் தமிழகத் திருக்கோயில்கள், இயக்க வடிவம் பெற்றிருந்தன. இமயம் முதல் குமரி வரை திருக்கோயில் அமைப்புப் பணிகளும் வழிபாட்டு முறைகளும் வெகுவேகமாகப் பரவின.

மானுடத்தின் வாழ்க்கை வரலாற்றில் எந்த ஒன்றும் நிலையான இடம் பெற வேண்டுமானால் அதற்கு இயக்கத் தன்மை இருக்கவேண்டும். அதாவது சமயத் தத்துவங்கள்