பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

235


நிலையானவையாகக் கெட்டிப்பட்டுவிடக் கூடாது. காலம், நாடு, நடைமுறைப் பழக்கங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப நாளும் புதுக்கிக் கொள்ளும் ஆற்றல்-இயல்பு சமயங்களுக்கும் சமய நிறுவனங்களுக்கும் வேண்டும். இடையறாது மக்களை நோக்கிச் சென்று அம்மக்களைத் தம் வயப்படுத்திக் கொண்டு மேம்பாடுறச் செய்தலை விழுமிய குறிக்கோளாகக் கொண்டு இயங்குதல் வேண்டும். ஓய்வு ஒழிவு இல்லாத செயற் பாடுகளை-மக்களை நோக்கிய செயற்பாடுகளை நாளும் புதுப்பித்துக் கொள்ளுதல் இயக்கத்தின் இலக்கணம். தமிழர் சமயத்தில் தோன்றிய திருக்கோயில்கள் தொடக்க காலத்தில் இயக்க வடிவம் பெற்றிருந்தன. பரந்த உலகத்தில் எங்கும் வெகுவேகமாகத் திருவுருவ வழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியன பரவின. ஊர்தோறும் மக்கள் திருக்கோயில்களை நாடினர்; திருக்கோயில்களை அந்த மக்கள் பேணினர். திருக் கோயில்கள் மக்களைப் பேணின. ஏன் வாழும் மானுடத்தின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயன்று வெற்றிகண்டது நமது சைவநெறி. அதனாலன்றோ கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை தோன்றிற்று. ஆயினும் திருக்கோயில்களைச் சார்ந்த மறுமலர்ச்சி நிகழ்வு நிலைத்து நிற்கவில்லை. இடையறவு ஏற்பட்டது. மீண்டும் ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகள் தோன்றி உழவாரப்படை யேந்தித் திருக்கோயில்களைக் காக்கும் பணியில் தலைப் பட்டார். அப்பரடிகள் காலத்தில் வந்தருளிய திருஞான சம்பந்தர், தமிழ்ச் சமயநெறிக்கு முரணாக எழுந்த சூழல்களை எதிர்த்துப் போராடினார். இதனைச் சேக்கிழார், “செழுந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறைவெல்ல என்று கூறி விளக்குகின்றார். ஆதலால் திருஞானசம்பந்தர் சமய இய்க்கம், சமயப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியுள்ளார்

திருஞான் சம்பந்தர் சிவநெறிப் பாதுகாப்புக்காக நாளும் இன்னிசையால் தமிழ்ப்பரப்பித் தமிழ்நெறிக்கு