பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

237


மானுட நேயத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்ந்த நமது சமயம் அதை அறவே மறந்து ஊழ்த் தத்துவத்தில் கிடந்து உழலுகிறது.

“அவ்வினைக் கிவ்வினை யாம் என்று
சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்”

என்பது திருஞான சம்பந்தர் திருப்பாடல்.

ஊழ்த் தத்துவத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெறத் திருக்குறள்-திருமுறைகள் வழிகாட்டினாலும் ஊழ்நம்பிக்கை மக்களுக்குச் சொல்லொணாத் துன்பமிழைத்து வருகிறது. நமது சமய நெறியில் ஒரு காலத்தில் தொண்டுகளாக இருந்தவை இன்று தொழில்களாக மாறிவிட்டன. திருக்கோயில் தூய்மையை உடலுழைப்பில் செய்வோர் இன்று ஏழைகள்! ஏழைக் கூலிகள். அக்கூலியும் வயிற்றுக்குப் போதாத கூலி. நமது சமய நெறி இன்று முற்றாக வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டது. தத்துவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. மெய்ப்பொருள் தேடும் நாட்டமும் இல்லை. மடைப்பள்ளிதான் இன்றையத் திருக்கோயிலின் ஆதிக்க சக்தி! பெளராணிக அடிப்படைகளும் சடங்குகளும் வேண்டுதல்களும் தான் இன்றைச் சமயத்தில் எஞ்சியுள்ளன. மக்கள் ஞானத்தை நாடவில்லை. ஏன் இந்த அவலம்?

தமிழ்நாட்டில் தமிழ்ச் சமய நெறியை அரியணையில் அமர்த்தவேண்டும்; திருக்கோயில்களில் தெய்வத்தமிழில்