பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழிபாடுகள் இயற்றவேண்டும். தமிழர்கள் இடையில் வந்த சாதிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒருகுலமாக வேண்டும்; மீண்டும் திருக்கோயில்களைச் சமுதாய மையங்களாக ஆக்கவேண்டும். திருக்கோயில் சார்ந்தே நமது மொழி, சமயம், கலை, நாகரிகம், சமுதாயம் ஆகியன வளரவேண்டும். திருக்கோயில்கள் அரசின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு அந்தந்த ஊர்மக்கள் சொத்தாக அமைந்து, மக்களால் மக்களுக்காக நிர்வாகம் செய்யப் பெறுதல் வேண்டும்.

திருக்கோயில்களின் ஆட்சிமுறை இராஜராஜன் காலத்தில் இருந்ததைப்போல கிராமத்தினால் தேர்வு செய்யப்பெறும் தக்காரால் செய்யப்பெற வேண்டும். ஆண்டு தோறும் நிர்வாக அமைப்பு மாறலாம். அரசு தணிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும்.

திருக்கோயில், அதனைச் சுற்றியுள்ள மக்களைத் தாய்போலப் பேணி வளர்த்துக் கல்வியும் ஞானமும் தந்து உயர்ந்திடுதல் வேண்டும். இந்த நெறிமுறை கைகூடினால் செந்தமிழ் வழக்கு வையகத்தில் நின்று விளங்கும்.


சித்தாந்தச் செந்நெறி*[1]

மனித குலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடந்த கால மனித வரலாறு, வாழும் நமக்குத் தந்த படிப்பினைகள் பலப்பல வரலாற்றுப் போக்கில் ஆக்கவியற் சிந்தனைகள் சில தோன்றின: அந்தச் சில கருத்துக்கள், உணர்வுகள் இன்றளவும் மனித குலத்திற்கு ஒளிவிளக்குகளாக நின்று வழி காட்டுகின்றன என்பதூஉம் மறுக்க முடியாத உண்மை. ஆயினும், மனித உலகம் தீயநெறிகளில் சிக்கிச் சீரழிந்த செய்திகள் வரலாற்று


  1. * குன்றக்குடியில் 20-10-90, 21-0-90-இல் நடைபெற்ற மெய்கண்டார் விழா - சிவாகம, திருமுறை சைவசித்தாந்த சிற்ப, இசை ஆய்வுக் கருத்தங்கில் ஆற்றிய முதன்மையுரை