பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

249


நெறிமுறைகளின்படி அரசு செய்யவேண்டும். “குறைவிலா துயிர்கள் வாழ்க!” இந்த ஆணை சோஷலிசம் தழுவிய ஆணை! ஒவ்வொருவரும் தாம் நுகர விரும்புவன வற்றையெல்லாம் நுகர்ந்து யாதொரு குறையுமின்றி வாழ்தல்: நான்மறைகளும் வளர்தல். அறநெறிகள் வளர்தல் வேண்டும். நல்லதவம் ஆகிய வேள்வி வளம் மல்கும்படி இயற்றுதல். நீதித்தன்மை பொருந்திய சைவம் உலகில் விளங்குக, நீதி என்பது என்ன? மனிதர்கள் அறத்தினையே வழிகாட்டியாகக் கொண்டு வாழ்தல். நீதி சார்ந்த வாழ்க்கை உயிர் வாழ்வு சட்டங்களால் கிடைக்காது. சிறைச்சாலைகளுக்குச் செல்லாமல் இருக்கவேண்டுமானால் தவிர்க்கலாம். ஆனால் மானம்-வெட்கம் என்ற கருத்துக்கள் தோன்றுவது சமயச் சூழலில்தான் என்பதை மறவாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.

“சீர்வாழி தெய்வ சிகாமணி சீரருணை
ஊர்வாழி வாழி உலகெல்லாம்-கார்வாழி
சித்தமிழ்த மான சிவாகமம் வாழி,செழு
முத்தமிழும் வாழி முறை.”


புண்ணிய யாத்திரை
புறப்படுவோம்

உலகின் பாகங்கள் இணைக்கப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்றது தமிழ், ஆம்! யாவரும் கேளிர், ஆம்! யாவரும் கேளிர்! ஆம் யாவரும் கேளிர்! இந்தச் சொற்றொடரே இன்றைய உலகின் மந்திரமொழி!

இன்று இந்தியாவைக் கிரகணம் பற்றிக்கொண் டிருக்கிறது. சாதி மதச் சண்டைகளில் சிக்கி, இந்தியா சீரழிந்துகொண்டு வருகிறது. இன்றைய இந்தியாவில் தீமை

கு.XII.17.