பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவனுக்கு எல்லா மொழிகளும் சொந்தம். எல்லா மொழிகளும் தெரியும். ஆனால் அவன் அருளைப்பெற வேண்டிய உயிர்களோ சிற்றறிவின. உயிர்களுக்குத் தெரிந்த மொழி இறைவனுக்குத் தெரியும். ஆனால், இறைவனுக்குத் தெரிந்த மொழிகள் உயிர்களுக்குத் தெரியாது. உயிர்கள், தனக்கும் இறைவனுக்கும் தெரிந்த ஒரு மொழியில் வழிபாடு செய்தால் பெரும்பயனைத் தரும்.

13. இறைவன் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மீது காதலுடையவன்.

அ. தமிழ்ப்புலவனாக அமர்ந்து தமிழை ஆராய்ந்து கவிதையையும் செய்திருக்கிறான்.
ஆ. அவன் மட்டுமல்ல; அன்னை பராசக்தியும், செந்தமிழ் முருகனும் தமிழ் ஆராய்ந்திருக்கின்றனர்.
இ. சைவ நாயன்மார்கள் பாடிய பாடல்களைக் கேட்க வேட்கை மீதூர்ந்து காசும் பிறவும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஈ. சேக்கிழாருக்குப் பெரிய புராணம் செய்ய அடி எடுத்துக் கொடுத்த போது “உலகெலாம்” என்ற துரய தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொடுத்தான்.
உ. மாணிக்கவாசகர் பாடி திருவாசகத்தைத் தானே தன் கைப்பட எழுதியிருக்கிறான்.
ஊ. உமாபதி சிவாச்சாரியாருக்குக் கொடுத்த சீட்டும் தமிழிலேயாம்.
எ. ஆடுகின்ற அம்பலத்தரசு தென் தமிழும் அனுபவிக்கும் வேட்கையிலேயே தென் திசை நோக்கி ஆடுகின்றான். தென்திசை நோக்கி நகர்ந்து மிதிக்கின்றான்.
ஏ. அன்னை பராசக்தி கொடுத்த சிவஞானப் பாலை உண்ட, வேத நெறி தழைத்தோங்கப் பிறந்த