பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் வழிபாடு

273


குழந்தை திருஞானசம்பந்தர் “தோடுடைய செவியன்” என்று தமிழிலேயே பாடியது. அப்படியானால் அன்னை பராசக்தி கொடுத்த சிவஞானம் தமிழ் வழிப்பட்டதுதானே!

மேற்கண்ட சான்றுகளால், இறைவன் தமிழ் விரும்பினன் என்ற கருத்து உறுதியாகிறது. அப்படியானால் தமிழ் அருச்சனை செய்து போற்றினால் அவன் திருவுளம் மகிழ்வான் என்பதற்கும் ஐயமுண்டோ!

14. சேக்கிழார் சிவபெருமான் வாயிலாக “அருச்சனைப் பாட்டேயாகும்.” என்று அருளிச்செய்த சொற்றொடர் அருச்சனை என்பது திருமுறைப்பாடல்களினால் செய்வதேயாம்.

15. திருமுறைகளை ஓதி அருச்சனை செய்கிற வழக்கு இருந்தமையினாலேயே “அருச்சனைப் பதிகம்” என்ற அகத்தியர் தேவாரத்திரட்டில் “பந்துசேர்விரல்” எனத் தொடங்கும் திருஞானசம்பந்தர் பதிகமும்; “வேற்றாகி விண்ணாகி” எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகமும், “கொன்று” எனத் தொடங்கும் சுந்தரர் தேவாரமும் அமைந்துள்ளன.

16. நம்முடைய சமயத்திற்குப் பெளத்த சமண சமயங்களால் இடர் வந்துற்ற போது அவ்விடரிலிருந்தும் சைவத்தைக் காப்பாற்றித் தந்த ஞானப் பாடல்களாகிய திருமுறைகளை அருச்சனை செய்வதில் இழுக்கு என்ன? அப்படி செய்வதின் மூலம் நன்றியுடையவர்களாகவும் வாழ முடியுமே.

17. திருமுறைகள் இறைவனே தனது உரைகளாக உகந்து, ஏற்றுக் கொண்டவைகளேயாகும். அவைகளால் அருச்சனை செய்வது ஆண்டவனுக்கு மிகவும் உகந்தது.

18. திருமுறைகள் செந்தமிழ் மந்திரங்கள்; அவைகளில் ஒவ்வொரு எழுத்தும் சொல்லும்கூட மந்திரங்கள்; அவைகள்