பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும், முத்தி என்றும் பேசும். பசுக்கள் பாசத்தினை விட்டுப் பதியினை அடைதல் முத்தி என்று திறம்படக் கூறுவர் சிவஞானமுனிவர்.

சைவசாதனங்கள்

சைவத்தின் சாதனங்கள் அன்புள்ளத்தை அடிப்படையாகக் கொண்டவை. சைவசாதனங்கள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகைப்படும். இவைகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. அரும்பு, மலர் பிஞ்சு, காய் என்று தொடர்பினை விளக்கிக் கூறுவர். தாயுமான அடிகள், சித்தத்தைச் சிவமாக்கிச் சிவஞானப் பெருவாழ்வைக் கொடுக்கும் இயல்பு, சரியை முதலிய மூன்றற்கே உரியதாகும். வேதவேள்விகள் நிலையற்ற காமியங்களை நல்கும். வேள்வி முதலாயின. ஞானத்தைப் பயவாமை யோடன்றி, தீவினைபோல அது நிகழவொட்டாது தடை செய்து நிற்றலும் ஆம். ஆதலால் தீவினைகள் இரும்பு விலங்கும் வேதத்துள் விதித்த வேள்வி முதலிய நல்வினைகள் பொன் விலங்கும் போல உணரற்பாலனவாம். வேள்வி முதலியவற்றாலாய இன்பம் முன் பசித்துண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியால் வரும் இன்பத்தைப் போலும். அவ்வேள்வி முதலியன போல அநுபவ மாத்திரையாற் கெடுதலின்றி மேன்மேல் முறுகி வளர்வனவாகிய சரியை கிரியை யோகங்களால் எய்தப் படும் சிவஞானம் பசித்து உண்டு பின்னும் பசித்தலில்லாத தேவர்களுக்கு அவ்வமுத உண்டியாலாய பயனைப் போலும் அவ்வமுத உண்டி நரைதிரை மூப்பின்றி நிலைபெறுதலாய பெரும்பயனைத் தருவதோடன்றி, பசி தீர்தலாகிய அவாந்தரப் பயனையும் தருதல்போல், சரியை முதலியனவும், சில ஞானத்தைத் தருவதோடன்றித் தத்தம்பத முத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம். இத்தகு முத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம். இத்தகு நெறிகளில் நின்றொழுகி,