பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றுள்கி யிடர்ப்புகா வகை தன் சீர்ப் பெயரே
புனைந்துதற்சேர், பலர் பெயர் முன்விகாரமுறப்பண்ணி
அவர் விகாரமெலாம் படுக்கும் வாய்மைச், சிவகுரு
சிகாமணியாய்த் திகழ்தேவசிகாமணிதாள் சென்னி வைப்பாம்.”

என்பது பாடல். இத்தகைய தெய்வசிகாமணி நம்மனோர்க்கு அருளுள்ளங்கொண்டு வழங்குகின்ற சுகம் சுத்தாத்துவித சுகமேயாம். “நன்றென்ற இத்தாந்த மா மருணைத் தேவசிகாமணி செய் சுத்தாத்துவித சுகம்” என்று குமாரசாமி முனிவரின் கூறியது சுத்தாத்து வித சுகம் மட்டுந்தானா தெய்வசிகாமணி குருமூர்த்திகளின் திருவடிகளே, சிவபோக மெய்ஞ்ஞானத்தின் குரு என்றெல்லாம் பேசப் பெறுகின்றது.

“பருவமழியாஞ் சிவயோக மெய்ஞ்ஞானப் பலனுயிர்க்குங்
கருவழியாமெனக் காண் நெஞ்சமே யொருகா லையினுந்
திருவழியா துறு பேரின்ப வாழ்வு தினங் கொடுக்கும்
திருவருணாசலத் தேவசிகாமணி சிற்குருவே”

இத்தகு அருள் நலம் கனிந்த ஆசாரியப் பெருந்தகையின் திருவடி மலர்களை வந்தித்து வாழ்த்துகின்றோம்.

இதுவரையில், துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுகின்ற எண்ணத்திலே- முயற்சியிலே சமய உணர்ச்சியும் வாழ்க்கையும் அரும்புகின்றன என்பதையும், உலகின் பல்வேறு சமயங்களுக்கெல்லாம் சைவம் மிகப் பழமையான தென்பதையும், சைவத் திருநெறி பரந்த மனப்பான்மையுடன் வேற்றுமைகள் எல்லாங் கடந்து முடிந்த முடிபாக விளங்குகின்றது என்பதையும், சைவம் இறை உயிர் தளை என்ற முப்பொருள் இயல்பை விளக்கி, உயிர்கள் தளையினின்று விலகி இறையைச் சார்வதே சமய வாழ்க்கையின்