பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசீர்வாதப் பேருரை

287


பயன் என்பதையும் இந்தச் சிவானந்தப் பெருவாழ்வைச் சரியை முதலிய மூன்று நெறிகளால் அடைய முடியும் என்பதையும், அங்ஙனம் அடைய மும்மலத்தாராகிய சகல ஆன்மாக்களுக்கும் இறைவனே குருவடிவில் தங்கி உபதேசிக் கின்றான் என்பதையும், அத்தகைய அருண்ஞான குருமூர்த்திகளே திருவண்ணாமலை ஆதின தாபகர், பூரீமத் தெய்வசிகாமணி குருமூர்த்திகள் என்பதையும், அவர்களது திருவடிமலர்கள் சிவஞானப் பெருவாழ்வையும், ஒருநாளும் அழியாத வாழ்வையும் அளிப்பன என்பதையும், திருவருள் உணர்த்த உணர்த்தினோம்.

ஆசியுரை

அருள்ஞானத் தெய்வசிகாமணியின் உரிமைப்பதி அருணை என்று பேசப்பெற்றாலும், இன்று மூர்த்திகளது திருவருளில் திளைக்கின்ற பேறு இந்த மாவட்டத்து மக்களுக்கே கிடைத்துள்ளது. அதன் பயனாகவே இன்று சமாஜ ஆண்டு விழாப் பேரவையை இங்கே - குன்றக்குடியில் கூட்ட முடிந்தது. சமரசத் தொண்டரும் நமது அன்பிற்குரியாரும் ஆகிய திரு. ஜி. கல்யாணம் பிள்ளை அவர்களின் விருப்பத்திற்கிணங்க இங்கு சமாசத்தை நடத்த எண்ணினோம். அதனைச் செயல் முறையில் கொண்டுவர அன்புணர்ச்சியும் தொண்டுவளர்ச்சியும் உள்ள அன்பர்களது குழு ஒன்று அமைத்து அவர்களை இப்பணியில் ஈடுபடச் செய்தோம். அக்குழுவின் தலைவராகச் சைவ உணர்ச்சியில் தலை சிறந்தவரும், கலைவளர்ச்சியில் ஆர்வங்கொண்டவரும் உலகம் சுற்றிப் பேரனுபவம் பெற்றவரும் நமது தூய அன்பிற்குரியவருமாகிய கோட்டையூர், க.வீ. அள. மு. இராமநாதன் செட்டியார் அவர்கள் அமைந்தார்கள். சிறந்த அரசியல் தொண்டரும் நமது ஆதின உழுவலன்பரும் சிறந்த பண்பாட்டினருமாகிய சா. கணேசன் அவர்களது அருமை முயற்சி இந்த விழாவிற்குப் பெரிதும் துணையாக இருந்தது.