பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன உள்ளம் படைத்தவரும் உழைப்புணர்ச்சியிற் சிறந்தவரும், நமது ஆதினப் பணிகளிலே பங்குகொண்டு விளக்கமுறச் செய்கிறவருமாகிய இளவல் திரு. வீர. சா. மெய்யப்பன் அவர்களுடைய அயராமுயற்சி மறக்கற் பாலதன்று. இயற்கையாகவே, நமது ஆதீனத்தின் பணிகளைத் தமது பணிகளெனக் கருதிச் செயலாற்றும் நமது புரவலர், சேவு மெ. மெய்யப்பச் செட்டியார் அவர்களது பணி பாராட்டுதற்குரியது. இவர்களுக்கும் இவர்களோடு ஒன்றி நின்று பல்லாற்றாலும் பணிபுரிந்த ஏனைய அன்பர்களுக்கும் சீரும் செல்வமும் வாழ்நாளும் பெருக, அண்ணாமலை அண்ணலின் திருவருளைச் சிந்திக்கின்றோம். சமாசமும், சமாசத்து அன்பர்களும், பல்லாண்டு வாழ்ந்து சைவத்தின் ஆக்கத்திற்குப் பணிசெய்யத் திருவருள் துணை செய்வதாகுக.


வளர்க சைவம்!-வாழ்க சமாஜம்!


சீர்வாழி தெய்வ சிகாமணி; சீர்அருணை
ஊர்வாழி; வாழி உலகெல்லாம்;-கார்வாழி
சித்தமிழ்தம் ஆனசிவஆகமம் வாழி செழு
முத்தமிழும் வாழி முறை.