பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமையுரை

293


தரத் தலைவன் ஒருவன் உளன் என்று உணர்த்தி நல்வாழ்வில் நிலைக்கச் செய்வது சமயம். எனவே வாழ்க்கையில் ஒழுக்கம் உறுதிபெறச் சமய வாழ்வு வேண்டியிருக்கிறது.

இந்த உண்மையைப் பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். அவர்களது வாழ்க்கையில் சமயப் பண்பியல்புகள் கலந்து படிந்திருந்தன. அவர்கள் தம் சிந்தனையிலும் செயலிலும் கடவுட் பற்றும் நம்பிக்கையும் கலந்திருந்தது. அவர்களுடைய தனி வாழ்வு பொது வாழ்வு ஆகிய இரண்டிலும் சமயப் பண்பாடு முதலிடம் பெற்றி ருந்தது. அவர்களுடைய வாழ்க்கையில் வழிபாட்டுணர்ச்சி வளர்ந்து வளம் பெற்றிருந்தது. வாழ்த்துகின்ற கலையன்றி வசைபாடும் கலையை அறியார். விண்ணை அளந்து காட்டுகின்ற-துன்பம் துடைத்து நல்லின்பம் நல்குகின்ற எண்ணற்ற ஆலயங்கள் தமிழகத்தில் எழுந்தன. எழுச்சிக்கு அடிப்படை பண்டைப் பெருமக்களது சமய வாழ்வும் வழிபாட்டுணர்ச்சியும்தான். தமிழகம் கண்ட சமய நிலையங்கள் இரண்டு வகையின. ஒன்று ஆலயங்கள், பிறிதொன்று மடாலயங்கள். ஆலயங்கள் வழிபாட்டு நிலையங்கள். பண்புகள் பல்கி-பக்தி உணர்ச்சி வளரத் துணை செய்பவை ஆலயங்கள். உணர்ச்சிக்குத் தூண்டுகோல்-காவலிடம் ஆலயங்கள். நல்லறிவு கொளுத்தித் தெளிவான உள்ளம் தந்து நல்லுணர்வை நல்கி, கொள்கையைப் பரப்பிக் காக்கும் காவல் நிலையங்கள் மடாலயங்கள். ஒன்று உணர்ச்சியை உண்டாக்கி வளர்த்துக் காக்க, இது மடாலயங்களின் தொண்டு. நல்லுணர்ச்சியைப் பக்தியாக மாற்றி வழிபாட்டிற் கலந்து இன்புறச் செய்வது. இவை ஆலயங்களின் தொண்டு. இவ்விரு வகை நிலையங்களையும் கண்டு அன்பு பேணி அருளுள்ளம் கொண்டு அறம் பல வளர்த்துக் களிப்புடன் வாழ்ந்த பெருமை பண்டைத் தமிழினத்திற்கு உண்டு. ஒரு சில ஆண்டுகளாகத் தமிழினத்தின் வாழ்வை இருட்சூழல் கவ்வியுள்ளது. கிப்ஸன் சொன்னபடி இவ்வுலகுபற்றிய அறிவு