பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனையில் பதித்துக்கொண்டு செயலில் இறங்குவோமாக! நமக்குத் தெரிந்த ஒரு சில ஆக்க வேலை முறைகளையும் குறிப்பிட ஆசைப்படுகின்றோம்.

1. நல்லன பெருகி அல்லன மறைய வேண்டுமானால் அதற்குரிய சாதனம் நல்லனவற்றைப் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசுதலும் பரவுதலும் ஆம். முதலில் சமயச் சார்புடைய அனைவர் மாட்டும் நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்க்கையை மலரச் செய்ய வேண்டும். வாழ்க்கையோடு ஒன்றுபட்ட சமயந்தான் நல்ல பயனைத் தரும். எனவே ஒவ்வொருவர் வாழ்விலும் பூரண பக்தி உணர்ச்சியை வளர்க்க வேண்டும். வீடுகளில், வீதிகளில், மன்றங்களில், ஆலயங்களில் எங்கும் தெய்வத் திருமறைத் தமிழ் முழக்கத்தை எழுப்ப வேண்டும். நாள் தவறினும் நாழிகை தவறினும் தான் தவறாத முறையில் திருமுறைகளை ஓதுகின்ற பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு இயக்கங்கள், பொதுப் பிரார்த்தனைகள் முதலியவற்றைத் தோற்றி வளர்க்க வேண்டும். இவை நம்மவர்பால் நடக்க வேண்டியவை.

2. சமய வாழ்வு வாழ்கின்ற பெருமக்களிடத்தும், சமய நிலையங்களிடத்தும் சாதி மனப்பான்மையை வளரவிடக் கூடாது. உண்மைச் சமயத்திற்கு சாதி உடன்பட்டதல்ல; புறம்பானது என்று தெளிவாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்து விடுவது ஒன்றாலேயே பெரும் பகுதியான மக்கள் சமய வாழ்வுக்கு வந்துவிடுவர்.

3. சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி. அதுதான் தமிழைப் பற்றியது. எங்கும் தமிழார்வம் தலையெடுத்து வளர்கிறது. தமிழன்பு பெருகிவருகிறது. தமிழன்பில் திளைக்கின்ற பல அன்பர்கள் திருக்கோயில்களில் தமிழுக்கு இடமில்லை என்ற ஒரு காரணத்தால் திருக்கோயில் வழிபாட்டுணர்ச்சிக்கு மாறுபடுகின்றனர். திருக்கோயில்