பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமையுரை

299


ஒரு சிலரை நாட்டிலே உலவவிடுவேமானால் பெரிதும் நன்மை உண்டு.

சமயத் தத்துவங்களை விளக்குகின்ற முறையில் இனிய எளிய தமிழில் அடிக்கடி சிறு நூல்கள் வெளியிட வேண்டும். அவைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்பட வேண்டும். நூல்கள் விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளினின்றும் எழுதல் கூடாது. குறிப்பாக உருவ வழிபாட்டு முறைகள் தத்துவங்கள், சமயச் சார்பில் உள்ள புறச் சாதனங்கள், சமய நூல்கள், புராணங்கள் முதலியவற்றைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டிய கடமை நமக்குண்டு. இக் கடமையினின்றும் தவறி விடுவோமானால் ஒன்றை மற்றொன்றாகப் பேசுகின்ற கூட்டம் பெருகி உண்மை அருகிவிடலாம். சமய அறிஞர்கள், சமயப் பற்றுள்ள படித்த இளைஞர்கள் இம்முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்தத் திருத் தொண்டினால் இன்று மக்களிடையே பரவியுள்ள மாறுபட்ட கருத்துக்களை மாற்றிவிடலாமென்று நம்புகின்றோம்.

அன்புடைப் பெருமக்களே! பணிகள் பலவற்றைப் பாங்குறத் தீட்டிக் காட்டலாம். எனினும் அனைத்தும் செயல் முறைக்கு வரவேண்டுமே. எனவே விரிவஞ்சி விடுக்க ஆசைப்படுகின்றோம். சமயத் தலைவர்கள் அனைவரும் இந்த இறுதியான கட்டத்தில் ஒன்றுபடவேண்டும். ஒவ்வொருவர் தனி வாழ்விலும் சமயத் தொண்டு நல்ல இடம் பெற வேண்டும். இங்ஙனம் ஒன்றுபட்டு நல்ல ஈடுபாட்டுணர்ச்சியோடு பணி செய்வோமானால் எண்ணிய பயனைப் பெறுவதற்கு யாதும் ஐயமில்லை. ஒன்றுபடவும், தொண்டுகளில் ஈடுபடவும் ஆண்டவன் திருவருள் துணை செய்யு மென்று நம்புகின்றோம்.

இந்த முயற்சியின் சின்னம் தான் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூடம். திருக்கூட்டத்தின் அருள் முழக்கம்