பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”

— திருமந்திரம்

அவனருளாலே அவன் ‘தாள்’ வணங்கி, கிடைத்தற்கரிய இம்மானுட உடலைப் பேரின்பத்திற்காகவே பயன்படுத்தி “தன்னையறிந்தின்பமுற்று” பேரின்ப வாழ்வினை நிறைவுடைய வாழ்வினைப் பெற்றுப் பேரின்பத்தை அடைந்து மகிழ்வோமாக,


நீதியே கடவுள்

மதம் என்ற சொல், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கொள்கை என்ற பொருளிலேயே வழங்கப் பெறுகிறது. “எழுவகை மதமே உடன்படன் மறுத்தல்” என்பது நன்னூல் நூற்பா. மனித உலகம் தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் அஃதாவது காட்டு வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்தில், கொள்கைகளை உருவாக்கும் உணர்வினைப் பெற்றது. மனம் போன போக்கில் வாழ்ந்த மனிதர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

இரண்டு தற்போக்குக் கொண்ட மனிதர்களிடையே மோதல் ஏற்படத்தானே செய்யும்! மனிதர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல்களைத் தவிர்க்கவே கொள்கைகள் உருவாயின; ஒழுங்கு முறைகள் பிறந்தன; ஒழுக்க நெறிகள் எழுந்தன. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கோ, மற்றை மன்பதைக்கோ உரிமை பேசமாட்டான், பேசவும் முடியாது என்று கருதியது அன்றைய மன்பதை,

ஆதலால் முதற் கொள்கை, மனிதனை மையமாகக் கொண்டு எழாமல், மனிதனையும் விஞ்சிய கடவுளை மையமாகக் கொண்டு பிறந்தது. முதற்கொள்கை கடவுளை மையமாகக் கொண்டே பிறந்ததால், இன்று பல்வேறு கொள்கைகள் தோன்றி வளர்ந்திருப்பினும் மதம் என்ற