பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

313


நம்புகிறோம். நம் பணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு அடையாளமாக நம் சமயத் தலைவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

திருமடங்கள் தமிழகத்தின் தத்துவப் பல்கலைக்கழகங்களாகத் திகழத் திருவருள்தான் துணை செய்ய வேண்டும்.

இந்து சமயம்

ந்து சமயம் என்று தோன்றியது என்று கூற முடியாத காலப் பழமையுடையது. கடவுள் உண்டு; அது ஞானப் பொருள்; உயிர் உண்டு. அது அறியாமையின் பாற்பட்டது; ஆனாலும் அறிவுப் பொருளாதற்குரிய தகுதியுடையது. உயிர் அறியாமையினின்று விலகி ஞானத்தை அடைதலே வாழ்க்கையின் நோக்கம் என்ற மையக் கருத்தைச் சுற்றி வட்டமிட்டு வளர்ந்து வந்துள்ள பல நெறிகளை இணைப்பாகக் கொண்டது இந்து சமயம்.

இந்து சமயம் இந்திய நாட்டின் மாபெரும் சமயம்; மொழிகளைக் கடந்த சமயம்; இனங்களைக் கடந்த சமயம். ஆனாலும் பாய்ந்தோடுகிற ஆறு பாய்ந்து செல்லும் நிலப்பரப்புக்களிளெல்லாம் வளம் உண்டாக்குதல்போல இந்து சமயம் இந்திய நாட்டில் பேசப் பெறும் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் வளம் சேர்த்திருக்கிறது.

இவ்வளவு பெருமை பெற்ற இந்து சமயமாயினும் காலத்தின் விளைவான சலிப்புகளிலிருந்து உயிர்ப்புடன் காப்பாற்றிக் கொள்வதற்கான கொள்கை ஆக்கங்கள்கோட்பாடுகளில் புதுப்பிப்புகள் இந்து சமயத்தில் தேவையான அளவு நடைபெறவில்லை. அது மட்டுமின்றி சில நன்னெறிகள்-மனிதர்களின் தன்னலத்தால்-உருமாறி தீநெறிகளாகி உள்ளன. அதனால் இந்து சமயம் தனது உயிர்ப்பு

கு.XII.21.